சாரவை தப்பிக்க உதவி செய்த அபூபக்கருக்கு எதிரான வழக்கை கொண்டு செல்ல முடியாத நிலை!
நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயம் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலின் குண்டுதாரியான மொஹம்மட் ஹஸ்தூனின் மனைவியான, 2 ஆம் கட்ட தாக்குதலுக்கு தயாராக இருந்ததாக கூறப்படும் புலஸ்தினி ராஜேந்ரன் அல்லது சாரா ஜஸ்மின் அல்லது சாரா தப்பிச் செல்ல உதவியதாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் என்.ரி. அபூபக்கருக்கு எதிரான வழக்கை முன் கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் சட்ட மா அதிபருக்கு தாம் அறிவிப்பதாக சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மட்டக்களப்பு…
கத்தான்குடியில், சஹ்ரானின் குடும்பத்தினர் 30 பேர் ஒரே வீட்டில் கைது!
காத்தான்குடியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹசீமின் சகோதரியின் கணவர் உட்பட 30 பேரே சந்தேகத்தின் பேரில் இன்று (01) அதிகாலை கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றில்…
சிந்துஜா மரணம் – வைத்தியர் பணியிடை நீக்கம்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரியான இளம் குடும்ப பெண் ஒருவரின் மரணத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் வைத்தியர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா தெரிவித்தார். அண்மையில் குழந்தையைப் பிரசவித்த 27 வயதான மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரி பெண் அதிக குருதி போக்கு காரணமாக கடந்த மாதம் 28ஆம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில்…
கெஹலியவின் விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்கள் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கு இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தரமற்ற தடுப்பூசி சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பெப்ரவரி 02ஆம் திகதி கைது செய்யப்பட்டதுடன், சந்தேகநபர் மறுநாள் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விளக்கமறியலில்…
வாக்கு அட்டைகள் விநியோகம் தொடர்பான அறிவிப்பு.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்கு அட்டைகள் விநியோகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த விநியோகம் இடம்பெறும் என அவர் தெரிவித்தார். அன்றைய தினம்…
ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு – முன்னாள் அமைச்சர் எஸ். பி நாவின்ன
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே இந்த நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க பொருத்தமானவர் என முன்னாள் அமைச்சர் எஸ். பி நாவின்ன ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் பின்னர் கடந்த இரண்டு வருடங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்காக ஆற்றிய பணிகளை நாட்டின் அனைத்து பிரஜைகளும் மறந்துவிடக் கூடாது என முன்னாள் அமைச்சர் தெரிவித்தார். நாட்டின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வகையில் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக 4 வருடங்களின் பின்னர்…
ஜனாதிபதி தேர்தல் – முறைப்பாடுகளின் எண்ணிக்கை 717 ஆக அதிகரிப்பு.
2024 ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக 51 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, 2024.07.31ஆம் திகதி தொடக்கம் 2024.08.20 ஆம் திகதி வரையிலும் கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 717 என்றும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரான் அதிபரின் ஹெலிகொப்டர் விபத்திற்கான காரணம் வௌியானது
மறைந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதற்கான காரணத்தை அந்நாட்டு அரசுடன் தொடர்புடைய செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. சீரற்ற வானிலை மற்றும் விமானத்திற்கு தனது எடையை கட்டுப்படுத்த முடியாமல் விமானம் விபத்துக்குள்ளானதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நடந்த குறித்த விபத்தில் ஈரான் அதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், விமானம் தாக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் வெளிப்புற தொந்தரவுகள் ஏற்பட்டதா என்பது தெரியவரவில்லை…
ஹக்கீம் கூட்ட சர்ச்சை – பாலமுனை முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளர் இடைநிறுத்தம்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை அமைப்பாளர் ஏ.எல்.அலியார் அவர்களை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தியுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் தெரிவித்தார் கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு கூட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம் அவர்களுடனான முரண்பாட்டைத் தொடர்ந்தே இவ் இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த கூட்டம் அட்டாளைச்சேனையில் ஏற்பட்ட போது கைகலப்பாக மாறியதும் குறிப்பிடத்தக்கது.
“உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்த வேண்டும்” – உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
உள்ளூராட்சி தேர்தலை உரியலை காலத்தில் நடத்தாமல் விட்டதன் மூலம் ஜனாதிபதியும் தேர்தல் ஆணைக்குழுவும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக இன்று தீர்ப்பளித்துள்ள உயர்நீதிமன்றம் , விரைவில் உள்ளூராட்சி தேர்தலை நடத்தவேண்டுமெனவும் தேர்தல் ஆணையத்தை பணித்துள்ளது. உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
மீண்டும் கட்சிக்கு வர வேண்டிய நிலை ஏற்படும் – மஹிந்த
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்துள்ள கட்சிகள் எதிர்காலத்தில் மீண்டும் கட்சிக்கு வர வேண்டிய நிலை ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறுகிய அரசியல் இலாபங்களுக்காக தமது கட்சிக்கு ஆதரவளிக்காமல் வேறு கட்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் சிலர் செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அநுராதபுரம் சல்காடு மைதானத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அங்குரார்ப்பண கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புதிதாக நியமனம் பெற்ற 3 தூதுவர்களும் 2 உயர்ஸ்தானிகர்களும்!
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் நேற்று (21) கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர். நற்சான்றிதழ்களைக் கையளித்த இராஜதந்திரிகளின் பட்டியல் பின்வருமாறு, 1. டயானா மெக்கிவிசீன்(Diana Mickeviciene) – தூதுவர் – லிதுவேனியா குடியரசு 2. டிரின் தி டாம் (Trinh Thi Tam) – தூதுவர் – வியட்நாம் சோசலிசக் குடியரசு 3. மாலர் தன் டைக் (Marlar Than Htaik) –…