News Editor Team

பல்கலைக் கட்டமைப்பிற்குள் அச்சுறுத்தும் அரசியலை இல்லாதொழிக்க வேண்டும்.

பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் அச்சுறுத்தல் அரசியலை இல்லாதொழிக்க வேண்டும் எனவும், மாணவர்கள் சுதந்திரமாக கல்வி கற்க வேண்டுமானால் பல்கலைக்கழக முறைமையை மறுசீரமைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சீர்குலைக்காமல் முறையான கல்வி நிறுவனங்களாக மாற்றுவதற்கான காலம் வந்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மட்டக்களப்பு பூனானையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வதேச விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை இன்று (20) மாணவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்த பின்னர் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்….

Read More

செந்தில் தொண்டமானின் கோரிக்கையை ஏற்ற ஜனாதிபதி ரணில்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள நீதிமன்ற தலையீட்டால்  தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், 1700 ரூபாய் சம்பளம் வழங்கும் வரை  தற்காலிக தீர்வாக இடைக்கால கொடுப்பனவாக மாதாந்தம் 5000+ரூபாய் அரசாங்கம் வழங்க வேண்டுமென  இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். நாட்டில் கொவிட் தொற்று ஏற்பட்டிருந்த காலப்பகுதியில் பெருந்தோட்ட மக்கள் பொருளாதார பின்னடைவை சந்தித்து இருந்தனர். ஏனைய சமூகத்தினருக்கு  5000 கொடுப்பணாவு வழங்கிய போதும் பெருந்தோட்ட மக்கள் அரச அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டிருந்தனர்….

Read More

எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசரும் முச்சக்கரவண்டியும் மோதி கோர விபத்து – நான்கு பேர் காயம்

எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசரும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் நான்கு பேர் காயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர். கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் இகிரியகொல்லேவ பகுதியில் இன்று (20) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன், எரிபொருளை ஏற்றிச் சென்ற பவுஸரும் அருகில் உள்ள வயல்வெளியில் கவிழ்ந்துள்ளது. இந்நிலையில், எரிபொருள் பவுசரில் உள்ள எரிபொருள் வேறு…

Read More

உள்ளுர் வளங்களை விற்காத ஒருவரே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் – நாமல்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது தொழிலதிபர் தம்மிக்க பெரேராவோ அல்லது வேறு எவருமோ கட்சிக்கு எழுத்து மூலம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் யார் போட்டியிடுவது என்பது தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே நாமல் ராஜக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். சரியான நேரத்தில் வேட்பாளர் நியமிக்கப்படுவார் என்றும் நாட்டின் கடனை அடைக்க உள்ளுர்…

Read More

ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவது முழு நாட்டிற்கும் நன்மை – சி.வி விக்னேஸ்வரன்

ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை (20) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவது முழு நாட்டிற்கும் நன்மை பயக்கும். அதிலும் குறிப்பாக தமிழர்களுக்கு நன்மையே. இந்த ஜனாதிபதி தேர்தலை பொறுத்த வரைக்கும் வேட்பாளர் எவரும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற முடியாத நிலைமை காணப்படுகிறது. அதனால் அவர்கள் சிறுபான்மையின மக்களின்…

Read More

பங்களாதேஷ் கலவரம் – இலங்கை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை.

பங்களாதேஷில் நிலவும் அமைதியின்மை காரணமாக அந்நாட்டில் தங்கியுள்ள இலங்கை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்நாட்டிலுள்ள 03 பல்கலைக்கழகங்களில் சுமார் 50 இலங்கை மாணவர்கள் பயின்று வருவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. பங்களாதேஷில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் காரணமாக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதாலும் வெளிநாட்டு மாணவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்படாததாலும் இலங்கை மாணவர்கள் பாதுகாப்பாக விடுதிகளில் தங்கி இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பங்களாதேஷில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர், மாணவர்களைச் சந்தித்து அவர்களின்…

Read More

தியவன்னா ஓயாவில் மிதந்து வந்த சடலம்

தியவன்னா ஓயாவில் மிதந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தியவன்னா ஜப்பான் நட்புறவு வீதியில் உடற்பயிற்சி பாதைக்கு அருகில் இன்று (20) காலை நபரொருவர் இந்த சடலத்தை கண்டுள்ளார். பின்னர் இது குறித்து தலங்கம் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 60 அல்லது 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மற்றும் மிரிஹான சொகோ பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

மீன் பிடி தொழிலுக்காக கடலுக்குச் சென்ற இரண்டு படகுகள் மாயம்.

யாழ்ப்பாணம் மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களிலிருந்து கடந்த 7 ஆம் திகதி மீன் பிடி தொழிலுக்காகக் கடலுக்குச் சென்ற இரண்டு மீன் பிடி படகுகள் காணாமல் போயுள்ளதாகக் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட மீன் பிடி படகில்  நான்கு மீனவர்களும் அம்பாந்தோட்டையிலிருந்து புறப்பட்ட மீன் பிடி படகில் இரண்டு மீனவர்களும் இருந்துள்ளனர். இது தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

Read More

அலி சப்ரி ரஹீம் MP பிணையில் விடுவிப்பு.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம்  இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் ஜூலை மாதம் 22ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு புத்தளம் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். அலி சப்ரி ரஹீம் இன்று (20) காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஆஜரான போது, ​​அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

யாழ்ப்பாணத்து மக்களுக்காக உண்மையாக செயற்பட்டேன் – அர்ச்சுனா

யாழ்ப்பாணத்து மக்களுக்காக உண்மையாக நான் செயற்பட்டேன். வைத்தியத்துறை மாபியாக்களுக்கு அது பிடிக்கவில்லை. அதனால் என்னை இங்கிருந்து விரட்டுகின்றனர். ஆனால், இந்த மக்களின் அன்பு என்பது எனது இதயத்துடிப்பு. இந்த மண்ணிலிருந்து விடைபெறுகின்றேன் என சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை என்ற வைத்தியசாலை இல்லாதது போல அரசியல்வாதிகள் அமைச்சரிடம் பேசும்போது நாம் பேசி பயனில்லை எனவும் கவலை வெளியிட்டார். சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரத்தில் நீடித்து வந்த…

Read More