Chief Editor

பொலிஸ் மா அதிபரின் பிரச்சினை உடனடி தீர்வு காணுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

பொலிஸ் மா அதிபரின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணுமாறு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதன்படி பொலிஸ் மா அதிபர் அல்லது பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு இன்று தீர்மானித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Read More

மைத்திரிபால செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது. மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து பணியாற்றுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு…

Read More

தேர்தலில் ஜனாதிபதி ரணிலுக்கே ஆதரவு மொட்டு கட்சி எம்பி சந்திரசேன

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்டக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Read More

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் நிலைய அதிபர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் – அமைச்சர் பந்துல

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் நிலைய அதிபர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டதாக கருதி உத்தியோகபூர்வ கடிதம் அனுப்பப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகளை கோட்டாபய ராஜபக்‌ஷ பார்த்துக் கொண்டிருப்பார். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சகித்துக் கொள்ளமாட்டார் என்றும் போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டார். கடுமையான தீர்மானங்களை எடுக்காவிடின் இவர்களை கட்டுப்படுத்த முடியாதெனவும் மக்களை பணயக் கைதிகளாக்கும் தொழிற்சங்கங்களுக்கு அடிப்பணிய முடியாதெனவும்  போக்குவரத்து அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.  

Read More

ஹிஜாப் அணிந்ததால் : 13 முஸ்லிம் அதிபர்களின் பெறுபேறுகள்  இடை நிறுத்தம்

(UTV செய்தியாளர்) ஹிஜாப் அணிந்து வினைத்திறன்காண் தடை தாண்டல்  பரீட்சைக்கு தோற்றியமைக்காக, மேல் மாகாணத்தின் 13 முஸ்லிம் அதிபர்களின் பெறுபேறுகள்  இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன‌. இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு பாதிக்கப்பட்ட அதிபர்கள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணை ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  நேற்று இந்த விசாரணைகள் இடம்பெற்ற போதும், மனித உரிமைகள் ஆணைக் குழு முறைப்பாட்டில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள பரீட்சை திணைக்கள அதிகாரிகள்  விசாரணைகளுக்கு சமூகமளித்திருக்கவில்லை. இதனையடுத்து இந்த விசாரணைகள் எதிர்வரும் 19…

Read More

கிளப் வசந்த கொலை : 10 லட்சம் பெற்ற கடை உரிமையாளர்

08.07.2024 – அதுருகிரிய துப்பாக்கிச் சூடு: ‘கிளப் வசந்த’, ‘நயன’ பலி – வசந்தவின் மனைவி கவலைக்கிடம் சுஜீவா ஓரளவு சீரான நிலையில் – காயமடைந்த மற்றவர்களுக்கு மேலதிக சிகிச்சை வெற்று தோட்டாக்களில் ‘KPI’ எழுத்துகள் – கொலைக்கு பின்னால் ‘கஞ்சிபானி இம்ரான்’ அதுருகிரிய பிரதேசத்தை பீதிக்குள்ளாக்கிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் மேலும் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. பிரபல தொழிலதிபர் ‘சுரேந்திர வசந்த பெரேரா’ அல்லது ‘கிளப் வசந்த’ உட்பட இருவரது கொலை மற்றும் நான்கு…

Read More

அத்துருகிரிய கொலைக்கு பின்னால் கஞ்சிப்பான இம்ரான்? வெளியான அதிர்ச்சி ரிப்போட்

அத்துருகிரியவில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பிரபல வர்த்தகர் ”கிளப் வசந்த” உயிரிழந்துள்ளார்.  இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான தகவலொன்றை ஊடகவியலாளர் சிவராஜ பதிவு செய்திருந்தார்.  நடந்தது என்ன? அத்துருகிரியவில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்ட வசந்த சுரேந்திர பெரேரா எனப்படும் க்ளப் வசந்த இலேசுப்பட்ட பிரமுகர் அல்ல.. பாதுகாப்பு மற்றும் அரசியல்வாதிகள் ஏராளமானோர் அவரின் நண்பர்கள்.. தமிழ் அரசியல்வாதிகளும் அதில் அடக்கம்..ஆரம்பகாலத்தில் கட்டப்பஞ்சாயத்து , கிஸ்தி , வரி ,…

Read More

𝐄𝐱𝐜𝐥𝐮𝐬𝐢𝐯𝐞: ஜனாதிபதியின் பதவிக்கால மனு: வழக்கில் நடந்தது என்ன? (முழு விபரம் )

(UTV செய்தியாளர்) ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடையும் தினம் தொடர்பில் நீதிமன்றத்தினால் வியாக்கியாண‌ம் வழங்கப்படும் வரை தற்போது திட்டமிடப்பட்டுள்ள வகையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதை தடுக்கும் உத்தர​வை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு ஏற்காது தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் இன்று ( 8) உத்தரவிட்டது. அத்துடன் இந்த மனுவை தாக்கல் செய்த தொழில்முயற்சியாளர் சி.டி. லெனவ வழக்குக் கட்டணமாக ஒரு இலட்சம் ரூபாவை செலுத்த வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம்…

Read More

Breaking News: தற்போதைய ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பிலான மனு தள்ளுபடி!

தற்போதைய ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை இன்று காலை முதல் விசாரித்த உயர்நீதிமன்றம் அது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தது. இந்த மனுக்களை  பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியரசர்களான விஜித் மலல்கொட, முர்து பெர்ணாண்டோ, பிரித்தீ பத்மன் சூரசேன, S.துரைராஜா ஆகியோர் ஆராய்ந்தனர். முதலில் வியாக்கியானம் கோரி மனு தொழிலதிபர் சி.டி.லெனாவாவினால் தாக்கல் செய்யப்பட்டது.பின்னர் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அடுத்த ஜனாதிபதி தேர்தல்…

Read More

ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள் : நீதிமன்றிற்கு அறிவித்த சட்டமா அதிபர்

தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள் என்பது தெளிவாக உள்ளதாக உயர் நீதிமன்றத்துக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான மனு இன்று (08) அழைக்கப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கனிஷ்க டி சில்வா இதனைத் தெரிவித்தார். மனுவை தள்ளுபடி செய்யக் கோரி பூர்வாங்க ஆட்சேபனைகள் எழுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் விளக்கம் அளிக்கும் வரை ஜனாதிபதித்…

Read More