விவசாயத்துறை எமது நாட்டுக்கு பொருத்தமான ஒன்றாக இருக்காது என ஜனாதிபதி கூறினார் – சஜித்
நில் வளவை கங்கை பெருக்கெடுத்து மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பல தடவைகள் பாராளுமன்றத்தில் நான் உட்பட ஐக்கிய மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளோம். அரசாங்கம் அதனை ஒரு சதத்திற்கேனும் கருத்தில் கொள்ளவில்லை. இது தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக் குழு ஒன்றை நிறுவியிருந்த சந்தர்ப்பத்தில், நட்ட ஈடு கிடைக்கப்பெறாத விவசாயிகளுக்கு நட்டை ஈடு வழங்குமாறு நாங்கள் கோரிக்கை விடுத்த போது, அந்தப் பிரதேசத்தில் உள்ள பத்தாயிரம் ஏக்கர் வயல் காணிகளை…