மின்சார கட்டண குறைப்பு நடவடிக்கை

மே மாதம் முதலாம் திகதி மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான முன்மொழிவுகள் ஆணைக்குழுவிடம் வழங்கப்படவிருந்தது.   எவ்வாறாயினும், மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய நாளை (10) வரை அந்த காலத்தை நீடிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.   உரிய முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் மின்கட்டணத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும், மின்கட்டண குறைப்பு வீதத்தை ஜூலை மாதம் அறிவிக்க முடியும் எனவும் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Read More

சுகவீன விடுமுறையை அறிவித்து கிராம உத்தியோகத்தர்கள் போராட்டத்தில்

இருநாள் சுகவீன விடுமுறையை அறிவித்து கிராம உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். சம்பள பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என அகில இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் நந்தன ரணசிங்க அறிவித்துள்ளார். எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்த முடியாது- பெருந்தோட்ட கம்பனிகள்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், தற்போதைக்கு அதனை நிறைவேற்ற முடியாது என இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் சங்கம் தெரிவித்துள்ளது. உற்பத்திச் செலவு அதிகரிப்பால் சம்பளத்தை உயர்த்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார். எவ்வாறாயினும், சம்பள நிர்ணய சபையின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை, தொழிலாளர் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தர நேற்று முன்தினம் வெளியிட்டார். இதன்படி, நாளாந்த சம்பளம் 1,350…

Read More

பௌஸிக்கு எதிரான வழக்கு மே 22 ஆம் திகதி!

முன்னாள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ. எச். எம். பௌஸிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (29) தீர்மானித்துள்ளது. நெதர்லாந்து அரசாங்கம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்துக்கு வழங்கிய ஜீப் வண்டியை தனது தனிப்பட்ட பாவனைக்குப்  பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்துக்கு  ஒரு மில்லியன் ரூபாவுக்கும்  அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த…

Read More

ஒலுவில் துறைமுகம் இந்தியாவுக்கு விற்பனை? மோடியின் பிரதிநிதி விஜயத்திற்கு எதிர்ப்பு

(UTV-COLOMBO) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்ற பாதுகாப்பு மற்றும் பொருளாதார மையங்களை அண்மைய நாடொன்றுக்கு வழங்குவதற்கு ஒருசில அரசியல் கட்சிகள் முயற்சிப்பதை தேசப்பற்றுள்ள இலங்கையர்களாக ஒன்றிணைந்து நாம் முறியடிக்க வேண்டும் என கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ.கலிலூர் ரஹ்மான் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடும்போது, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் நமது…

Read More
chamuditha ranil

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அழைப்பாணை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பிலான விசாரணைக்காக, ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்குகுற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) வழங்கப்பட்டுள்ள முறைபாட்டிற்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ‘நீதவான் திலின கமகேவை (Thilina Gamage) கொல்வதற்கு பாதாள உலகத்துடன் இணைந்து சதி செய்த டி.ஐ.ஜி சகாவின் ஒலி நாடா இதோ’ எனும் தலைப்பினை கொண்ட காணொளி சமுதிதவால் அவரது யூடியூப் தளத்தில் கடந்த மாதம் 27ஆம்…

Read More

சமூகத்தின் நலன்கருதி மு.காவுடன் இணைந்து போட்டியிட்டு ஏமாற்றப்பட்டுள்ளோம் – ரிஷாட் பதியுதீன்

(எஸ்.அஷ்ரப்கான்) முஸ்லிம் சமூகத்தின் நலன்கருதி முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை பாதுகாக்கும் நோக்கில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிட்டு கடைசியில் ஏமாற்றப்பட்டுள்ளோம் என . மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பொத்திவில் பிரதேசத்தில் சனிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம் சமூகத்தின் நலன்கருதி முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை பாதுகாக்கும் நோக்கில் புத்தளம் மாவட்டத்தில்  முஸ்லிம்…

Read More

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இன்று அவசரமாக கூடுகிறது!

இஸ்ரேல் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் காரணமாக உலகப்போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இன்று அவசரமாக கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேல் ஈரானால் தாக்கப்பட்ட நிலையில், ​​இஸ்ரேலின் அண்டை நாடான ஜோர்டான் அவசரகால நிலையை அறிவித்து வான்வெளியை மூட முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதால், இஸ்ரேலின் நண்பரான அமெரிக்கா, ‘ஒதுங்கி நிற்க வேண்டும்’ என, ஈரான்…

Read More

இலங்கையின் பணம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான செய்தி!

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கை ரூபாய் (LKR) உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாறியுள்ளது. இது ஆண்டின் தொடக்கத்தில் இருந்த பெறுமதியுடன் ஒப்பிடுகையில் 7% க்கும் அதிகமான வளர்ச்சியென Bloomberg சந்தை தரவு குறிகாட்டிகள் சுட்டிக்காட்டுகின்றன. ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

Read More

சஜித் – அனுர விவாதம் : ஒருங்கிணைப்பாளர் சந்திப்பு இரத்து

சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க இடையிலான பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான விவாதத்தின் ஒருங்கிணைப்பாளர்களான நளின் பண்டார மற்றும் நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னணி நாளிதழ்களான டெய்லி மிரர் மற்றும் லங்காதீப ஆகியன அரசியல் விவாதத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…

Read More