அக்கறைப்பற்றில் தீயில் கருகி உயிரிழந்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோலாவில்-02 பகுதியில் தீயில் கருகி உயிரிழந்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. ஓலைகளால் வேயப்பட்ட வீட்டின் முன் அறையில் குறித்த நபர் நேற்று முன்தினம் (10) காலை தீயில் கருகி உயிரிழந்துள்ளார். நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் மீதான பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், குறித்த நபர் கழுத்து வெட்டப்பட்டமையால் ஏற்பட்ட அதிக இரத்தப் போக்கின் காரணமாக உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைய, இதுவொரு கொலை என தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக உயிரிழந்தவரின் 33…

Read More

கிராம அலுவலர்களுக்கான கொடுப்பனவில் மாற்றம்!

கிராம அலுவலர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை திருத்தியமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கிராம அலுவலர்களுக்கு வழங்கப்படும் அலுவலக கொடுப்பனவுகள் மற்றும் எழுதுபொருள் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான சுற்றறிக்கை அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் அனைத்து மாவட்ட செயலாளர்கள், மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாநகர சபை மற்றும் மாநகர சபை எல்லைக்குள்…

Read More

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

நூருல் ஹுதா உமர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருது பயிற்சி நிலையத்தில் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதல்கள் வழங்கும் நிகழ்வு இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் எச்.யூ. சுசந்தவின் நெறிப்படுத்தலில் 2024.03.24 ஆம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் மற்றும் பணிப்பாளர் பசின்டு குணரத்ன, தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் மற்றும் அம்பாறை மாவட்ட…

Read More

JustNow: வெடுக்குநாரி சம்பவம்: அனைவரும் விடுதலை

வவுனியா வெடுக்குநாறிமலை ஆலயத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட எட்டுபேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 08.03.2024 ஆம்திகதி வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளின்போது குறித்த எட்டுபேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்டதையடுத்து குறித்த வழக்கினை நடத்த பொலிஸார் கால அவகாசம் கோரியிருந்தனர். மேலும் சட்டமா திணைக்களத்திடமிருந்து சில தகவல்களை பெற இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர். இருப்பினும் பொலிஸாரினால் எந்தவொரு ஆக்கப்பூர்வமான ஆவணங்களும் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க முடியாததையடுத்து…

Read More

விஜித ஹேரத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை- ரோஹித

  என்னை திருடன் என்று குறிப்பிட்டு போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன்.போலியான குற்றச்சாட்டுக்களினால் எனது அரசியல் பயணத்தை பலவீனப்படுத்த முடியாது என கோப் குழுவின் தலைவர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.   மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்தில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ‘ஊழல் மோசடிக்கு எதிராக செயற்படுவதாக அரசாங்கம் சர்வதேச…

Read More

30 நாட்களுக்குள் சம்பள உயர்வு கிடைக்கப்பெறும். நாட்சம்பளமாக 1700 ரூபாவை பெறமுடியும் – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் 30 நாட்களுக்குள் சம்பள உயர்வு கிடைக்கப்பெறும். நாட்சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை பெறமுடியும் – என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அத்துடன், மலையக தமிழர்கள் தமது தேசிய அடையாளத்தை சனத்தொகை கணக்கெடுப்பின்போது மலையகத் தமிழர் என வெளிப்படுத்துவதற்கான ஏற்பாட்டை உள்வாங்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் எனவும் அமைச்சர் கூறினார். தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்டு தற்காலிக குடில்களில்…

Read More

இடைநிறுத்தப்பட்ட பரீட்சைகளை நடத்த தீர்மானம்!

வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானமையினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 10ஆம் மற்றும் 11ஆம் தரங்களுக்கான பரீட்சைகள் நாளையும், நாளை மறுதினமும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இடைநிறுத்தப்பட்டுள்ள பரீட்சைகள் எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளிலும் நடத்தப்படவுள்ளதாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் நிமல் ஜயவீர தெரிவித்துள்ளார். மேல்மாகாண பாடசாலைகளில் 10 ஆம் மற்றும் 11 ஆம் தரங்களுக்கான மூன்றாம் தவணையின் விஞ்ஞான பாட வினாத்தாள் அண்மையில் நடைபெற்றதுடன், அந்த பரீட்சைக்கு முன்னதாக வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

Read More

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை!

பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (04) மரண தண்டனை விதித்துள்ளது. 2005ஆம் ஆண்டு பேலியகொட பொலிஸாரால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் இவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

Read More

நீதி கோரி சுமந்திரன் – கலாய்க்கும் டக்ளஸ்

இலங்கை நீதிமன்றங்களில் தமிழருக்கு நீதி கிடைக்காது என்பவர்கள் தமக்கு நீதி கிடைக்க நீதிமன்றங்களை நாடுவது வேடிக்கையானது என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில், ”எல்லா பிரச்சினைக்கும் சர்வதேச நீதி விசாரணையே தேவை என்றவர்கள்,தமது உட்கட்சி விவகாரத்திற்கு தீர்வு கோரி இலங்கை நீதிமன்றத்தை நாடியுள்ளனர். முன்னதாக இலங்கை அரசு தமிழருக்கு நீதியும் வழங்காது தீர்வும் தராது…

Read More

புதிய கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர் காணல் மார்ச் 13 முதல்

புதிய கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். மார்ச் 13, 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் நேர்காணல் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது . கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற கிராம அலுவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற 4,232 பேர் நேர்காணலில் பங்கேற்க உள்ளனர். நேர்முகத் தேர்வுகளின் பின்னர் வெற்றிடங்கள் மிக விரைவாக நிரப்பப்படும் என இராஜாங்க அமைச்சர் அசோக…

Read More