ஹிஜாப் அணிந்ததால் : 13 முஸ்லிம் அதிபர்களின் பெறுபேறுகள்  இடை நிறுத்தம்

(UTV செய்தியாளர்) ஹிஜாப் அணிந்து வினைத்திறன்காண் தடை தாண்டல்  பரீட்சைக்கு தோற்றியமைக்காக, மேல் மாகாணத்தின் 13 முஸ்லிம் அதிபர்களின் பெறுபேறுகள்  இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன‌. இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு பாதிக்கப்பட்ட அதிபர்கள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணை ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  நேற்று இந்த விசாரணைகள் இடம்பெற்ற போதும், மனித உரிமைகள் ஆணைக் குழு முறைப்பாட்டில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள பரீட்சை திணைக்கள அதிகாரிகள்  விசாரணைகளுக்கு சமூகமளித்திருக்கவில்லை. இதனையடுத்து இந்த விசாரணைகள் எதிர்வரும் 19…

Read More

ஒரு வருடத்துக்கு முன்பே பரீட்சைக்குத் தோற்றி மருத்துவ பீடத்துக்குத் தெரிவாகிய கன்னத்தோட்டை பஹ்மா

றுவென்வெல்லை கன்னத்தோட்டையைச் சேர்ந்த பாத்திமா பஹ்மா என்ற மாணவி, ஒரு வருடத்துக்கு முன்பே க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ளார். கேகாலை மாவட்டத்தின் கன்னத்தோட்டை சுலைமானியாக் கல்லூரியில் ஆங்கில மொழி மூலம் பயின்று வந்த பஹ்மா, அடுத்த வருடமே உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருக்க வேண்டும். ஆனால், தன்னிடமிருந்த நம்பிக்கை மற்றும் விடா முயற்சி காரணமாக தனிப்பட்ட பரீச்சாத்தியாக ஒரு வருடத்துக்கு முன்பே பரீட்சையில் தோற்றினார். அண்மையில் வெளியான பரீட்சை முடிவுகளின்படி 2.0694 Z ஸ்கோர் புள்ளிகளுடன்…

Read More

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இவ்வார இறுதியில்..?

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இவ்வார இறுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்தது. அவர்களில் 281,445 பாடசாலை பரீட்சார்த்திகளும், 65,531 தனியார் பரீட்சார்த்திகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

A/L மாணவர்களுக்கு மற்றுமொரு புலமைப்பரிசில்! அரசின் அறிவிப்பு

2022/2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து 2024/2025   உயர்தரப் பரீட்சைக்கு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை ஒரு பாடமாகக் கற்கும்   மாணவர்களுக்கு 5000 புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு ஜனாதிபதி நிதியம் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மாத வருமானம் 100,000 ரூபாய்க்கு குறைவாக உள்ள…

Read More

புத்தக பையின் சுமையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை!

மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட “பயிற்சி புத்தகம்” தவிர மற்ற பாடப்புத்தகங்களை பாடசாலைக்கு கொண்டு வருவதை குறைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி அதிபரின் நேரடிக் கண்காணிப்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கல்விச் செயலாளர் வசந்தா பெரேரா வழிகாட்டுதல்கள் சிலவற்றை வௌியிட்டுள்ளார். பாடசாலை புத்தகப் பையின் எடை அதிகரிப்பினால் பாடசாலை மாணவர்களுக்கு முதுகுத்தண்டு பாதிப்புகள் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைப்பது தொடர்பில்…

Read More

UTVயின் கிராத் போட்டிக்கான வீடியோக்களை அனுப்பும் நாள் இன்றுடன் நிறைவு!

(UTV | கொழும்பு) –  UTVயின் கிராத் போட்டிக்கான வீடியோக்களை அனுப்பும் நாள் இன்றுடன் நிறைவு! இலங்கையின் முன்னணி தமிழ் ஊடகமான UTV நடாத்தும் மாபெரும் கிராத் போட்டிக்கு , போட்டியாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட வீடியோக்களை அனுப்ப வேண்டிய இறுதி திகதி இன்றுடன் (31) நிறைவுபெறுவதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய , கிராத் போட்டியில் பங்குபற்றிய அனைவரும் மேலதிக விபரங்களை எமது UTV HD என்ற யுடிப் சனல் ஊடாக தெரிந்துகொள்ள முடியும். விபரங்களுக்கு: 📞 0772772070 BE…

Read More

கல்வி பொது தராதர பரீட்சைகள் நாளை முதல் ஆரம்பம்

(UTV | கொழும்பு) –  கல்வி பொது தராதர பரீட்சைகள் நாளை முதல் ஆரம்பம் சென்ற ஆண்டுக்கான (2022 கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது. 6 மாதங்களின் பின்னர் இடம்பெறும் பரீட்சையை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மாணவர்கள் எதிர்கொள்ளவுள்ளனர். கொவிட் 19 பரவல், பொருளதார நெருக்கடிக்கு மத்தியில் மாணவர்கள் இதற்கான தயார்ப்படுத்தலில் ஈடுபட்டிருந்தனர். எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த பரீட்சையில் 4 லட்சத்து 72 ஆயிரத்து…

Read More

 கருத்தரங்குகளுக்கு தடை

(UTV | கொழும்பு) –  கருத்தரங்குகளுக்கு தடை எதிர்வரும் கல்விப் பொதுத்தராதர பரீட்சையை எதிர் நோக்கவுள்ள மாணவர்களுக்கு மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் என்பவற்றை நடத்துவதற்கு எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்தநிலையில், எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவுடன் சாதாரண…

Read More

 உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தம் – இன்று தீர்மானம்

(UTV | கொழும்பு) –  உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தம் – இன்று  தீர்மானம் உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் எடுப்பதற்காக இன்று (25) பிற்பகல் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அவர்களின் பிரச்சினைக்கு விரைவான தீர்வை வழங்க அரசாங்கம் தலையிட வேண்டும் என அதன் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, பல்கலைக்கழக பேராசிரியர்கள் இன்றி…

Read More

அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

(UTV | கொழும்பு) –  அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் இனி , அடுத்த 25 வருடங்களுக்கு தேசிய கல்விக் கொள்கை மற்றும் அது தொடர்பான சீர்திருத்த முன்மொழிவுகளை தயாரிப்பதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோரின் பங்களிப்புடன் 10 பேர் கொண்ட உபகுழு நியமிக்கப்படவுள்ளது. ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைவாக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கான செயற்பாட்டின் போது அவசரமாக…

Read More