பல்கலைக் கட்டமைப்பிற்குள் அச்சுறுத்தும் அரசியலை இல்லாதொழிக்க வேண்டும்.

பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் அச்சுறுத்தல் அரசியலை இல்லாதொழிக்க வேண்டும் எனவும், மாணவர்கள் சுதந்திரமாக கல்வி கற்க வேண்டுமானால் பல்கலைக்கழக முறைமையை மறுசீரமைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சீர்குலைக்காமல் முறையான கல்வி நிறுவனங்களாக மாற்றுவதற்கான காலம் வந்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மட்டக்களப்பு பூனானையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வதேச விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை இன்று (20) மாணவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்த பின்னர் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்….

Read More

செந்தில் தொண்டமானின் கோரிக்கையை ஏற்ற ஜனாதிபதி ரணில்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள நீதிமன்ற தலையீட்டால்  தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், 1700 ரூபாய் சம்பளம் வழங்கும் வரை  தற்காலிக தீர்வாக இடைக்கால கொடுப்பனவாக மாதாந்தம் 5000+ரூபாய் அரசாங்கம் வழங்க வேண்டுமென  இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். நாட்டில் கொவிட் தொற்று ஏற்பட்டிருந்த காலப்பகுதியில் பெருந்தோட்ட மக்கள் பொருளாதார பின்னடைவை சந்தித்து இருந்தனர். ஏனைய சமூகத்தினருக்கு  5000 கொடுப்பணாவு வழங்கிய போதும் பெருந்தோட்ட மக்கள் அரச அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டிருந்தனர்….

Read More

உள்ளுர் வளங்களை விற்காத ஒருவரே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் – நாமல்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது தொழிலதிபர் தம்மிக்க பெரேராவோ அல்லது வேறு எவருமோ கட்சிக்கு எழுத்து மூலம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் யார் போட்டியிடுவது என்பது தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே நாமல் ராஜக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். சரியான நேரத்தில் வேட்பாளர் நியமிக்கப்படுவார் என்றும் நாட்டின் கடனை அடைக்க உள்ளுர்…

Read More

ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவது முழு நாட்டிற்கும் நன்மை – சி.வி விக்னேஸ்வரன்

ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை (20) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவது முழு நாட்டிற்கும் நன்மை பயக்கும். அதிலும் குறிப்பாக தமிழர்களுக்கு நன்மையே. இந்த ஜனாதிபதி தேர்தலை பொறுத்த வரைக்கும் வேட்பாளர் எவரும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற முடியாத நிலைமை காணப்படுகிறது. அதனால் அவர்கள் சிறுபான்மையின மக்களின்…

Read More

தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்.

தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடல் கிழக்கு மாகாண ஆளுநரின் மாளிகையில் நேற்று(19) இடம்பெற்றது. இதன்போது பெருந்தோட்டத் தமிழர்களுக்கும் வடக்கு மற்றும் கிழக்குத் தமிழர்களுக்கும் இடையில் வலுவான நட்புறவை வளர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் ராஜதுரை மற்றும் போசகர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Read More

ஜனாதிபதியின் சூழ்ச்சிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அகப்பட கூடாது – முஜிபுர் ரஹ்மான்

ஜனாதிபதியினதும், அரசாங்கத்தினதும் சூழ்ச்சிக்கு அகப்படாமல் தேர்தல்கள் ஆணைக்குழு மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்க வேண்டும். மஹிந்தானந்த அளுத்கமகேவின் நிலைக்கு ஜனாதிபதி சென்றுள்ளமை கவலைக்குரியது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி தேர்தல் தற்போது சூடு பிடித்துள்ளது.ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு ரணில் – ராஜபக்ஷ அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து சூழ்ச்சி செய்கிறது….

Read More

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

சர்வஜன வாக்குரிமையைப் பின்பற்றி ஜனநாயகத்தைப் பேணுவதில் இலங்கை தனித்துவம் கொண்டுள்ளது எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த ஜனநாயக மரபைப் பேண அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் வலியுறுத்தினார் அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ளும் போது அந்த விடயத்துடன் தொடர்புடைய அனுபவமுள்ள ஒருவரிடம் தான் பொறுப்பை ஒப்படைத்ததாகவும், அதன் படி கே.என்.சொக்சி போன்ற சட்டத்தரணிகளைக் கொண்டு அவ்வாறான பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார். எவ்வாறாயினும், 2015ஆம் ஆண்டு அரசியலமைப்புத்…

Read More

மஹிந்தவை சந்தித்தார் அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர்.

அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசன் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இந்த சந்திப்பு இன்று (19) வெள்ளிக்கிழமை காலை கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

Read More

ஜனாதிபதி வேட்பாளருக்கு நான் தகுதியானவன்.

பாராளுமன்றத்திலிருந்து அரச தலைவரை தெரிவு செய்வது இம்முறை இடம்பெறக்கூடாதென பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். மக்களின் வாக்குகள் ஊடாகவே நாட்டின் தலைவர் தெரிவு செய்யப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டை கட்டியெழுப்புவதில் எந்தவொரு சவாலுக்கும் முகம்கொடுக்க தான் தயார் என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கும் தான் தகுதியானவர் என பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Read More

ஜனாதிபதி தேர்தல் – தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தீர்மானித்தவாறு இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார் 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் இந்த வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள நிலையிலேயே தேர்தல்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.

Read More