Category: உள்நாடு
பங்கு சந்தை பரிவர்த்தனை நடவடிக்கைகள் உயர்வு
(UTV|கொழும்பு) – கொழும்பு பங்கு சந்தை பரிவர்த்தனை நடவடிக்கைகள் இன்றைய தினம் அதிகரித்து பதிவாகியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் தொடர்ந்து குறைவடைந்து வந்திருந்தது. இந்நிலையில் கொழும்பு பங்குச் சந்தையின் S&P SL20 3.34% வீதமாக இன்று (22) பதிவாகியுள்ளது. மேலும் கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 5061.50 புள்ளியாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யானை விவகாரம் – 4 பேர் விடுதலை
(UTV|கொழும்பு) – சட்டவிரோதமாக யானை வளர்த்தமை தொடர்பில் அலி ரோஷானுக்கு எதிரான வழக்கின், 8 சந்தேக நபர்களில் 4 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அலி ரொசானுக்கு எதிரான குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 8 சந்தேக நபர்களில் 4 பேர் விசேட மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
19ஆவது அரசியலமைப்பு திருத்தம் நீக்கப்பட வேண்டும்
(UTV | கொழும்பு) – 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இல்லாதொழிப்பதற்கு பலமான பாராளுமன்றமொன்று அவசியம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு
(UTV|கொழும்பு) -இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 28 பேர் பூரணமாக குணமடைந்து இன்றைய தினம் வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது வரை 1526 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி அதிகாரிகளை ஜனாதிபதி கண்டித்தமை தொடர்பில் மங்கள கேள்வி
(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மத்திய வங்கியின் அதிகாரிகளை மோசமாக கண்டித்தமை அது ஊடகங்களில் வெளியானமை குறித்து முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, நிதியமைச்சர் மஹிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கருணா தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு CID இற்கு உத்தரவு
(UTV|கொழும்பு) – முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் அண்மையில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபரால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐ.தே.க. உறுப்பினர்கள் இடைநீக்கம் : மனு நிராகரிப்பு
(UTV | கொழும்பு) – கட்சி உறுப்பினர்களின் 99 பேரை இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சி எடுத்த முடிவுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என முன்வைக்கப்பட்டிருந்த மனுவினை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று(22) நிராகரிப்பு செய்துள்ளது.
பொரளை – புறக்கோட்டை வரை பேரூந்து முன்னுரிமை வீதி இன்று முதல் அமுல்
(UTV|கொழும்பு) – பொரளை முதல் புறக்கோட்டை வரை இன்று முதல் பேரூந்து முன்னுரிமை வீதி அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொரளை, புஞ்சி பொரளை, மருதானை, டெக்னிக்கல் சந்தி மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் இன்று முதல் பேரூந்து முன்னுரிமை வீதி அமுல்படுத்தப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 9 மணிவரையான காலப்பகுதியில் பேரூந்து முன்னுரிமை வீதி அமுலில் இருக்கும் என பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க கப்புகொட தெரிவித்தார். இதேவேளை, காலி வீதியில் பேருந்து முன்னுரிமை…
இந்தியாவில் இருந்து மேலும் 230 பேர் நாடு திரும்பினர்
(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் சிக்கியிருந்த மேலும் 230 பேர் இன்று அதிகாலை நாடு திரும்பினர். விஷேட விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் டில்லி விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கடந்த 48 மணி நேரத்தில் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகவில்லை
(UTV|கொழும்பு) – கடந்த 48 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுடன் எவரும் அடையாளம் காணப்படவில்லை என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டில் இதுவரை 1950 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதுடன், கொரோனா தொற்றுக்குள்ளான 1498 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை 441 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.