பொதுத் தேர்தல் – சுகாதார வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி இன்று

(UTV | கொழும்பு) – தேர்தல்களை நடத்துவதற்கும் கொவிட்-19 தடுப்பதற்கும் சுகாதார வழிகாட்டுதல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்று(22) நள்ளிரவில் வெளியிடப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

(UTV|கொழும்பு) – 2020 மார்ச் 13 முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் செப்ரெம்பர் 30 ஆம் திகதிவரை 3 மாதங்களுக்கு நீடிக்கப்படும் என்று  மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், ஜூன் 30 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் 3 மாதங்களால் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ்…

Read More

மேலும் 12 கடற்படையினர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 12 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, இதுவரை 785 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 1498 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

​தேசிய அடையாள அட்டை ஒரு நாள் சேவை மீள ஆரம்பம்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் காரணமாக கைவிடப்பட்ட தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதற்கிணங்க பத்தரமுல்லயில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் நாளாந்தம் 250 பேருக்கு தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்படவுள்ளது.

Read More

இறுதியாண்டு பரீட்சைக்காக இன்று முதல் ஆரம்பம்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட பல்கலைக்கழகம் இறுதியாண்டு பரீட்சைக்காக இன்று(22) முதல் திறக்கப்படவுள்ளதாக பல்கலைகழங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். எனினும், பல்கலைக்கழகத்துக்குள் ஒன்றுக்கூடல், விளையாட்டு என்பனவற்றுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்

Read More

அவுஸ்திரேலியாவில் இருந்த 50 பேர் நாட்டுக்கு

(UTV|கொழும்பு)- அவுஸ்திரேலியாவில் இருந்த 50 இலங்கையர் இன்று(21) நாடு திரும்பியுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இதேவேளை, நாடு திரும்ப முடியாத நிலையில் மாலைத்தீவில் இருந்த 255 இலங்கையர்கள் இன்று நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஶ்ரீலன்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல் – 102 எனும் சிறப்பு விமானம் ஊடாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான…

Read More

“பொத்துவில் பிரதேசத்தில் பலாத்காரமாக இடம்பெறும் காணி அளவீடுகளை உடன் நிறுத்த வேண்டும்” – முன்னாள் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை!

(UTV|கொழும்பு)- பொத்துவில்லில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் மக்களிடம் எதுவுமே தெரிவிக்காது, திடீரென அந்தப் பிரதேசத்துக்குச் சென்று, காணிகளை அளவீடு செய்வதும், அந்த இடத்தில் பாதுகாப்பு படையினரையும் கொண்டுசென்று, மக்களை பீதிக்குட்படுத்தும் தொல்பொருளியல் திணைக்களத்தின் செயற்பாடுகளையும் தான் வன்மையாகக் கண்டிப்பதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “பொத்துவில் பிரதேசத்தில் காணி அளவீடு செய்வதற்கு முஷர்ரப் என்பவர் தடையாக இருப்பது நியாயமா?” என ஊடகவியலாளர் ஒருவர், நேற்று (20) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் கேள்வி எழுப்பியபோதே, அவர்…

Read More

பொதுத் தேர்தல் தொடர்பான சுகாதார வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி நாளை

(UTV|கொழும்பு)- எதிர்வரும் பொதுத் தேர்தலை சுகாதார வழிமுறைகளுடன் நடாத்துவது தொடர்பிலான வழிகாட்டல் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நாளை(22) வௌியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். சுகாதார வழிகாட்டலின் கீழ் பொதுத் தேர்தலை நடாத்துவது மற்றும் சுகாதார நடைமுறைகள் மூலம் நாட்டில் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுப்பது குறித்த ஆலோசனைகள் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் அடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Read More

மேலும் 26 பேர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 26 பேர் பூரணமாக குணமடைந்து இன்றைய தினம் வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது வரை 1498 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

இதுவரை 773 கடற்படை வீரர்கள் பூரண குணம்

(UTV| கொழும்பு)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 2 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, இதுவரை 773 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Read More