Category: உள்நாடு
இன்சாபுடன் 600 தடவைகள் தொடர்பு கொண்டவர் வெளியே 6 உள் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டவர் உள்ளே – ரிஷாத்
(UTV | கொழும்பு) – இஸ்லாத்துக்கு எதிராகவும் இஸ்லாமிய தஃவா அமைப்புக்களுக்கு எதிராகவும் ஞானசார தேரர் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதால், அவரது குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அனைவரையும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு விசரணைக்கு அழைத்து, உண்மைத்தன்மையை வெளிப்படுத்துவதன் மூலமே மக்களுக்கு சரியான தகவல்களை கொண்டு சேர்க்க முடியுமென, ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் சாட்சியமளித்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் மாலி – மஹிந்தானந்தா முறுகல்
(UTV | கொழும்பு) – கடந்த 2011ம் ஆண்டில் இடம்பெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றிருந்தால் அதற்கான ஆதாரங்களை முன்வைத்து அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்குமாறு இலங்கை இருபதுக்கு 20 கிரிக்கெட் அணியின் தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் இலங்கைக்கு
(UTV | கொழும்பு) – பிரித்தானியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 60 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் 71 ஆவது பிறந்த நாள் இன்று
(UTV | கொழும்பு) – இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 07 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி கோட்டாபய ராஜபபக்ஷ தனது 71 ஆவது பிறந்த நாளை இன்று(20) கொண்டாடுகின்றார்.
கொலை மற்றும் கப்பம் கோரலுடன் தொடர்புடைய “பூயிடா” கைது
(UTV | கொழும்பு) – கொலை மற்றும் கப்பம் கோரலுடன் தொடர்புடைய தொன் லகித ரவிஷான் ஜயதிலக என்ற “பூயிடா” என்ற நபரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1950
(UTV | கொவிட் -19) – கொவிட் 19 தொற்றுக்குள்ளான மூவர் மாத்திரமே, நேற்று(19) பதிவாகியுள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
(UTV|கொவிட்-19)– நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் இன்று(19) அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1950 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1446 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரதமர் – இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு
(UTV|கொழும்பு)– இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்குமிடையில் விசேட சந்திப்பொன்று இன்று(19) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
கஞ்சிபானி இம்ரானின் தந்தை மீது தாக்குதல் – சந்தேகநபர் விளக்கமறியலில்
(UTV|கொழும்பு)- பிரபல போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிபானி இம்ரானின் தந்தை மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று பேரில் ஒருவரை எதிர்வரும் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் கைது செய்யப்பட்ட முன்று சந்தேக நபர்களையும் 24 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஞானசார தேரருக்கு பாதுகாப்பு வழங்கவும் : ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிவிப்பு
(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் அளிக்க நேற்றைய தினம்(18) மூன்றாவது நாளாகவும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் கலகோட அத்தே ஞானசார தேரர் ஆஜராகியிருந்தார்.