தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 153 பேர் வீடுகளுக்கு

(UTV|கொழும்பு)- முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் பல தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 153 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று வெளியேறியுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிகேடியர் சந்தன விக்ரமாசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, இரணைமடு விமான படை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து இலங்கை கடற்படை உறுப்பினர்கள் 71 பேர் தமது தனிமைப்படுத்தல் நடவடிக்கையினை நிறைவு செய்து வெளியேறியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Read More

மேலும் 08 கடற்படை உறுப்பினர்கள் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 08 கடற்படை உறுப்பினர்கள் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 756 ஆக அதிகரித்துள்ளது.

Read More

சினிமா திரையரங்குகளை திறக்க அனுமதி

(UTV|கொழும்பு)- நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் சுகாதார நடைமுறைகளின் கீழ் எதிர்வரும் ஜூன் 27 ஆம் திகதி திறப்பதற்கு கலாச்சார அலுவல்கள் அமைச்சு அனுமதியளித்துள்ளது.

Read More

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய 98 பேர்

(UTV|கொழும்பு)- அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த மேலும் 98 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல் – 605 எனும் சிறப்பு விமானம் ஊடாக அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள் அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை குறித்த பயணிகள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்துள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Read More

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

(UTV|கொவிட்-19)- நாட்டில் புதிதாக 23 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1947 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியதாக அடையாளம் காணப்பட்டவர்களில் 18 பேர் டுபாய் நாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை 1421 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில்,…

Read More

ஹம்பாந்தோட்டையில் 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

(UTV|ஹம்பாந்தோட்டை )- ஹம்பாந்தோட்டை பல பகுதிகளிலும் நீர் விநியோகம் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 08 மணி முதல் இரவு 08 மணி வரை 12 மணித்தியாலங்கள் வீரகெட்டிய, வலஸ்முல்ல, மெதமுலன, மருதவெல, பதிகம, முல்கிரிகல மற்றும் ஹொரேவெல ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது நிலத்தடி நீர் வழங்கும் குழாயில் மேற்கொள்ளப்பவுள்ள திருத்தப்பணிகள் காரணமாகவே இவ்வாறு நீர்…

Read More

தண்டப்பணம் செலுத்துவதற்கான சலுகை காலம் நீடிப்பு

(UTV|கொழும்பு)- கடந்த பெப்ரவரி 16ஆம் திகதிக்கு பின்னர் பொலிஸாரினால் வழங்கப்பட்ட தண்டப்பணங்களை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகை காலம் எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் மற்றும் உப தபால் நிலையங்களில் குறித்த அபராத தொகையினை செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

மைத்திரி – ரணிலிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு உத்தரவு

(UTV|கொழும்பு)- மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வாக்குமூலமொன்றை பதவி செய்துக் கொள்ளுமாறு சட்டமா அதிபரினால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு செயலாளர் நிஷாரா ஜயவர்தன தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமரின் ஆலோசகர் எஸ்.பாஸ்கரலிங்கம் மற்றும் வங்கி அதிகாரி ஒருவரிடமும் மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் வாங்குமூலம் ஒன்றை பதிவு செய்துக் கொள்ளுமாறு பதில்…

Read More

‘குடு திலான்’ என்பவருக்கு மரண தண்டனை விதிப்பு

(UTV |கொழும்பு) – போதைப்பொருள் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட ‘குடு திலான்’ என்பவருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று(18) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Read More

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 24 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய தற்போது வரை 1421 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அத்துடன் இலங்கையில் 1924 பேர் கொரோனா வைரஸ் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  

Read More