மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவித்தல்

(UTV|கொழும்பு)- மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்துக்கு வருகை தருபவர்கள் தமக்கு உரிய நேரத்தினை ஒதுக்கிக் கொள்ள புதிய தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலான காலப்பகுதிக்குள் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அலுவலக தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து தமது நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.  

Read More

விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்குரிய ஓய்வூதியம்

(UTV|கொழும்பு)- விவசாய மற்றும் மீன்பிடி ஓய்வூதியம் பெறுபவர்கள் ஜுன் மாதத்திற்கான ஓய்வூதியத்தை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் தபால் நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதிற்கு முன்னர் நாட்டிலுள்ள அனைத்து தபால் நிலையங்களுக்கும் குறித்த இந்த ஓய்வூதியத்திற்கான நிதியை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் சட்டத்தரணி பிரேமசந்திர ஏபா தெரிவித்துள்ளார்.

Read More

டுபாயிலிருந்து 290 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டுபாய் நாட்டில் சிக்கியிருந்த 290 இலங்கையர்கள் இன்று (18) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.226 ரக விசேட விமானம் மூலம் இவர்கள் நாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். குறித்த பயணிகளுக்கு விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் அவர்களை விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள 4 ஹோட்டல்களில் தற்காலிகமாக தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்

(UTV|கொழும்பு)- நாட்டில் நேற்றைய தினம (17) 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,924 ஆக அதிகரித்துள்ளது. சென்னையிலிருந்து திரும்பிய ஐவரும் பங்களாதேஷிலிருந்து வந்த இருவரும் கடற்படை உறுப்பினர்கள் இருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,397 ஆக அதிகரித்துள்ளது. தற்போது அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று நோயாளிகளில்…

Read More

கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல்

(UTV|கொழும்பு)- விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிப்பானை இம்ரானின் தந்தையை மாளிகாவத்தை பகுதியில் வைத்து அடையாளந்தெரியாத சிலர் ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். தாக்குலில் காயமடைந்த கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர்களில் ஒருவர் வீதிப் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV| கொழும்பு)- இலங்கையில் இன்று மேலும் 09 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 1924 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, இதுவரை 1397 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Read More

நிதி குத்தகை நிறுவனங்களின் முறைகேடுகளை ஆராய 3 பேர் கொண்ட குழு

(UTV|கொழும்பு) – நிதி, குத்தகை நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்த ஆராய்வதற்காக மத்திய வங்கி 3 பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்துள்ளது.

Read More

MCC உடன்படிக்கை மீளாய்விற்கு அரசாங்கம் கால அவகாசம் கோரல்

(UTV|கொழும்பு) – MCC உடன்படிக்கையை மீளாய்வு செய்ய இலங்கை அரசாங்கம் கால அவகாசம் கோரியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த கோரிக்கைக்கு அமெரிக்கா மதிப்பளிப்பதாக அமெரிக்க தூதுரகம் சுட்டிக்காட்டியுள்ளது. MCC உடன்படிக்கையின் ஊடாக இலங்கைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிதியை நீண்ட காலத்திற்கு ஒதுக்கிவைக்க முடியாது என குறிப்பிட்டுள்ளது.  

Read More

அர்ஜுன மற்றும் அஜானுக்கு எதிராக பிடியாணையை செயற்படுத்துமாறு உத்தரவு

(UTV | கொழும்பு) – மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் அஜான் புஞ்சிஹேவாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை செயற்படுத்துமாறு குற்றப்புலனாய்வுப் திணைக்களத்திற்கு கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read More

மேலும் 26 பேர் பூரண குணம்

(UTV | கொவிட் -19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 26 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

Read More