மஹா நாயக்க தேரரை சந்தித்தார் அநுர குமார திசாநாயக்க

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை (16) மீரிகம கந்தன்கமுவ ஸ்ரீ வித்யாவாச பிரிவென் மஹா விகாரையில் ராமக்ஞ மஹா நிக்காயவின் மஹா நாயக்க தேரர் சங்கைக்குரிய மக்குலேவே விமல நாயக்க தேரரை சந்தித்தார். இன்றளவில் நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமை பற்றி அவரை உள்ளிட்ட மஹா சங்கத்தினருடன் கலந்துரையாடிய அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலில் வெற்றி பெறுவதற்கான அவர்களின் நல்லாசியை பெற்றுக்கொண்டார். இத்தருணத்தில் தேசிய மக்கள்…

Read More

17 வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னங்கள் அறிவிப்பு

எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 17 சுயேச்சை வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னங்களை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எரிவாயு சிலிண்டரும், எம் திலகராஜாவுக்கு சிறகு சின்னமும் மற்றும் பாக்கிய செல்வம் அரியநேந்திரனுக்கு சங்கு சின்னமும் வழங்கப்பட்டுள்ளது.

Read More

எவருக்கும் ஆதரவில்லை – மைத்திரிபால

ஜனாதிபதி தேர்தலில் எவருக்கும் ஆதரவளிப்பதில்லை என தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தன்னை பற்றி ஊடகங்களும் ஏனைய கட்சிகளும் வெளியிட்டு வரும் விடயங்களை அவர் நிராகரித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைபதவி தொடர்பான விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஏனையவர்கள் மேற்கொள்ளும் தீர்மானங்கள் செல்லுபடியற்றவை என குறிப்பிட்டுள்ளார்.

Read More

அலி ஸாஹிர் மௌலானா ரணிலுக்கு ஆதரவு.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சற்றுமுன்னர் சந்தித்து அவர் தனது ஆதரவை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

சஜித், மைத்திரி இணைவு ? அது பொய்யான செய்தி.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்துள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் அவர் விடுத்துள்ள அறிவிப்பில், முன்னாள் ஜனாதிபதியுடன் கூட்டு சேர்வதற்கோ அல்லது அவ்வாறான ஆதரவைப் பெறுவதற்கோ ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு அவசியம் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமான தோல்வியை எதிர்நோக்கி, வெறிபிடித்துள்ள அரசாங்கத்திற்கு சார்பான பிரசாரக் குழுக்கள் பொய்யான செய்திகளை…

Read More

அனுராதபுரத்தில் மஹிந்த மற்றும் நாமல்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்று (16) அனுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதியில் ஆசிர்வாதம் பெற்றனர். பின்னர், மகா சங்கரத்தினருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Read More

மைத்திரி ஐ.ம.ச.வுக்கு சென்றால் மிகவும் நல்லது – விஜயதாச ராஜபக்ஷ

எனக்கு ஆதரவளித்துவந்த மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொள்ளப்போவதாக கேள்விப்பட்டேன். அவர் அவ்வாறு சென்றால் மிகவும் நல்லது என நினைக்கிறேன் என தேசிய ஜனநாயக  முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் வியாழக்கிழமை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், வேட்புமனு தாக்கல் செய்யும்போது இதுவரை காலம் பின்பற்றப்பட்டுவந்த ஒழுக்கம் கடைப்பிடிக்கப்படுவதை காணக்கூடியதாக…

Read More

தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம் – எவரும் எமக்கு சவாலல்ல – நாமல்

நாட்டின் ஒற்றையாட்சி மற்றும் தேசிய உற்பத்தி ஆகியவற்றை எம்மால் மாத்திரமே பாதுகாக்க முடியும்.தேர்தலில் நிச்சயம் வெற்றிப் பெறுவோம். கொள்கையை முன்னிலைப்படுத்தி செயற்படுவதால் எவரும் எமக்கு சவாலல்ல என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் வியாழக்கிழமை (15) வேட்புமனுவை சமர்ப்பித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தீர்மானமிக்கது.நாட்டின் ஒற்றையாட்சி மற்றும் தேசிய உற்பத்திகளை எம்மால் மாத்திரமே பாதுகாக்க முடியும்….

Read More

தலதா மாளிகைக்கு சென்று ஆசிபெற்றார் சஜித்

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டு தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்காக எதிர்க்கட்சித்தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாஸ ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (16) காலை ஸ்ரீ தலதா மாளிகைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். தலதா மாளிகைக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவரை தியவடன நிலமே உள்ளிட்ட விகாரை பஸ்நாயக்க நிலமேமார்கள் வரவேற்று ஆசி வழங்கினர்.

Read More

34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு.

வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து ‘இயலும் ஶ்ரீலங்கா’ இணக்கப்பாட்டில் 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள் சற்று முன்னர் கொழும்பு வோர்டஸ் எஜ் ஹோட்டலில் கையெழுத்திட்டன. மக்களின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பவே ‘இயலும் ஶ்ரீலங்கா’ இணக்கப்பாட்டில்  34 அரசியல் கட்சிகள், கூட்டணிகளுடன் இணைந்து கையெழுத்திட்டுள்ளதாகவும், இது வெறுமனே அரசியல் கூட்டணி அல்ல என்றும் ‘இயலும் ஶ்ரீலங்கா’ இணக்கப்பாட்டில் கையெழுத்திட்டும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

Read More