பௌசி, வெல்கம ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏ.எச்.எம்.பௌசி மற்றும் குமார வெல்கம ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Read More

ரணிலுக்கு ஆதரவு – பெரமுனவின் எம்.பி.க்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான கடிதங்கள் விரைவில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஒழுக்காற்று நடவடிக்கைகளின் பின்னர் கட்சியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலின் போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்…

Read More

வேலுகுமார் செய்துள்ள செயல், வரலாற்று துரோகம் – மனோ

வேலுகுமார்  இன்று செய்துள்ள செயல், மிகப் பெரிய வரலாற்று துரோகம் வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. மன்னிக்கக்கூடாது. கண்டி மாவட்ட மக்கள் துணையுடன் இவருக்கு மறக்க முடியாத பாடத்தை நாம் கற்றுத் தருவோம் என ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமை குழுக்களின் மெய்நிகர் கூட்ட முடிவுகளின்படி, பாராளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார், கட்சி,…

Read More

சமையல் எரிவாயு சின்னம் ஜனாதிபதிக்கு கிடைத்த இறைவனின் ஆசிர்வாதம்

சமையல் எரிவாயு வரிசையை முடிவுக்கு கொண்டுவந்த  ரணில் விக்ரமசிங்கவுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் சின்னமாக கிடைத்திருப்பது இறைவனின் ஆசிர்வாதமாகும். மக்களின் இதயத்தை தொடக்கூடிய இந்த சின்னம், நிச்சயமாக ரணிலை வெற்றிபெறச்செய்யும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வியாழக்கிழமை (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டு மக்கள் சமையல் எரிவாயுக்காக…

Read More

21 ஆம் திகதி மாத்திரம் பாராளுமன்றம் கூடும்.

ஆகஸ்ட் மாத இரண்டாம் அமர்வு வாரத்துக்கான பாராளுமன்ற அமர்வை 21 ஆம் திகதி புதன்கிழமை மாத்திரம் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த வாரம் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். அதற்கமைய, ஆகஸ்ட் 21 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.30 மணி முதல்  10.30 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து ம10.30 மணி…

Read More

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி துண்டுப் பிரசுரம்.

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி 14 ஆம் திகதி புதன்கிழமையும் யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது. புதன்கிழமை (14) பிற்பகல் யாழ்ப்பாணம் நகர் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் இந்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி மக்களுக்கு தமது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Read More

ஜனாதிபதி தலதா மாளிகைக்குச் சென்று ஆசி பெற்றார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவை வியாழக்கிழமை (15) கையளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகைக்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசி பெற்றார். தலதா மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல வரவேற்றார். பின்னர் தலதா மாளிகையின் மேல்மாடிக்கு சென்ற ஜனாதிபதி, மத வழிபாடுகளில் ஈடுபட்டார். தலதா மாளிகைக்கு வருகை தந்திருந்த மக்களிடம் நலன் விசாரித்த ஜனாதிபதி அவர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். எதிர்வரும் ஜனாதிபதித்…

Read More

ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளருக்கும் பாதுகாப்பு வழங்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர். கொழும்பில் நேற்று (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார். “இந்த ஜனாதிபதி காலத்தில், வேட்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை மேற்பார்வையிட அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு வேட்பாளருக்கும் சில பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு வேட்பாளருக்கும் உள்ள அச்சுறுத்தல்கள்…

Read More

பலஸ்தீனர்களுக்காக ஒரு பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் – ரிஷாட் எம் பி

தலைமைத்துவத்தின் தீர்மானத்துக்கு கட்டுப்படுவதற்கு மக்கள் இணங்கியதாலும், கட்சியின் அரசியல் உயர்பீடத்தில் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் 31 வாக்குகள் கிடைத்ததாலுமே, சஜித் பிரேமதாசவை ஆதரிக்க தீர்மானித்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், கைச்சாத்திடும் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வு, இன்று (15) கொழும்பு, சினமன் லேக்சைட் ஹோட்டலில் இடம்பெற்றது. இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும…

Read More

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம்.

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர் மூன்று ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆனால் தேர்தல் சட்டத்தின்படி அந்த ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி 39 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளர்களின் பட்டியல் பின்வருமாறு 01. ரணில் விக்கிரமசிங்க 02. சரத் மனமேந்திர 03. அபூபக்கர் மொஹமட் இன்பாஸ் 04. எஸ். பி. லியனகே 05. பானி…

Read More