Category: உள்நாடு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புதிய பஸ் சேவை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை பிரதான புகையிரத நிலையம் மற்றும் மாகும்புர போக்குவரத்து மத்திய நிலையம் வரையான புதிய சொகுசு பஸ் சேவை இன்று (15) ஆரம்பமானது. இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், நாட்டிற்குள் பயணிக்க போக்குவரத்து சேவை ஏஜென்சியின் வசதிகளைப் பெறவில்லை என்றால், அவர்கள் விமான நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அவரிவத்த பேருந்து நிலையத்திற்கு வர வேண்டும். இதன்படி, விமான நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த பஸ்கள்…
சஜித் – ரிஷாட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கும் உடன்படிக்கையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று (15) கைச்சாத்திட்டுள்ளார். இது தொடர்பான உடன்படிக்கையில் கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இன்று (15) இடம்பெற்றுள்ளது.
நாட்டு மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பேன்.
நாட்டுக்குள் புதிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த தாம் ஆரம்பித்திருக்கும் வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் சென்று, நாட்டில் அனைத்து மக்களையும் பாதுகாப்பதற்காக செப்டெம்பர் 21 ஆம் திகதி மக்கள் ஆணையைப் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இராஜகிரிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (15) வேட்புமனு தாக்கல் செய்ததன் பின்னர் அங்கு கூடியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். தேர்தலை நடத்துவது ஒருபுறமிருக்க, அரசாங்கத்தை கூட கொண்டுச் செல்ல முடியாதென…
தமிழ் பொது வேட்பாளரின் சின்னம் சங்கு
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ் பொது வேட்பாளர் ப.அரியநேத்திரனுக்கு சங்கு சின்னம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சரத் பொன்சேகாவுக்கு லாந்தர் விளக்கு சின்னம்.
ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் சரத் பொன்சேகாவுக்கு தேர்தல் ஆணைக்குழுவினால் “லாந்தர்” விளக்கு சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எம் பி க்கள் – ரணிலுக்கு ஆதரவு.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹூமான், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் திகாமடுல்லை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் ஆகியோரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர். பம்பலபிட்டியில் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு அவர்கள் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது…
ரணிலின் தேர்தல் சின்னம் கேஸ் சிலிண்டர்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேர்தல் சின்னமாக “கேஸ் சிலிண்டர்” சின்னத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.
ராஜித்தவின் வருகை ரணிலின் வெற்றி நிச்சயமாகியுள்ளது – ஐக்கிய தேசிய கட்சி
பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்னவின் வருகையின் மூலம் ரணில் விக்ரமசிங்க வெல்லப்போவது உறுதியாகியுள்ளது. 42 கட்சிகள் இணைந்த பாரிய கூட்டணியை நாங்கள் அமைப்போம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஷல ஜாகொட தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்காக தற்போது எம்முடன்…
ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு.
அடுத்த மாதம் 21ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கலாநிதி அன்வர் எம். முஸ்தபா தலைமையிலான ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி நாட்டை சிறப்பாக வழிநடத்தும் அறிவும், அனுபவமும் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது பூரண ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளது என்று அக்கட்சியின் பிரசார செயலாளர் ஏ.எல்.ஏ.ஹுபைல் ஊடகங்களுக்கு தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானியும், முன்னாள் அமைச்சருமான சாகல ரத்நாயக்க, கட்சியின் செயலாளர், ஜனாதிபதியின் முக்கிய முகாமைத்துவக் குழு மற்றும் ஏனைய…
சகல கட்சிகளுக்கும் கதவுகள் திறந்தே இருக்கின்றன அமைச்சர் நிமல் அழைப்பு
இலங்கையில் அரசியல் கட்சிகள் எப்போதும் கட்சித் தலைவரின் பிடியில் இருப்பதால் மக்களுக்காகவும் கட்சிக்காகவும் செய்ய வேண்டிய ஜனநாயக தியாகங்கள் தவிர்க்கப்படுகின்றன. ஆனால் பொதுஜன ஐக்கிய முன்னணி அவ்வாறானதல்ல. எனவே பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. என எவரும் எம்முடன் இணைந்து கொள்ளலாம் என நிமல் சிறிபால டி சில்வா அழைப்பு விடுத்தார். பொதுஜன ஐக்கிய முன்னணி அங்குரார்ப்பண நிகழ்வு புதன்கிழமை (14) வோட்டஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும்…