ஈரான் அதிபரின் ஹெலிகொப்டர் விபத்திற்கான காரணம் வௌியானது

மறைந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதற்கான காரணத்தை அந்நாட்டு அரசுடன் தொடர்புடைய செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. சீரற்ற வானிலை மற்றும் விமானத்திற்கு தனது எடையை கட்டுப்படுத்த முடியாமல் விமானம் விபத்துக்குள்ளானதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நடந்த குறித்த விபத்தில் ஈரான் அதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், விமானம் தாக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் வெளிப்புற தொந்தரவுகள் ஏற்பட்டதா என்பது தெரியவரவில்லை…

Read More

காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

பாகிஸ்தான், இந்திய எல்லையில் உள்ள காஷ்மீரில் அடுத்தடுத்து 5.1 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கத்தால் அங்குள்ள பல கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீடுகளில் இருந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

Read More

இந்தியாவில் நிலநடுக்கங்கள் பதிவு

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகியுள்ளது. பாரமுல்லாவில் பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று காலை 6.45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ஏழு நிமிட இடைவெளியில் 4.9 மற்றும் 4.8 என்ற ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பதற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்துள்ள நிலையில், இதனால் அச்சமடைந்த மக்கள் வீதிகளில்…

Read More

ரஷ்யாவில் பாரிய நிலநடுக்கம்

ரஷ்யாவின் கிழக்கே உள்ள கடல் பகுதியில் இன்று (18) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தையடுத்து அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்த போதிலும், பின்னர் அது சுனாமி நிலை அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடலில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும் பகுதியில் ஏற்பட்டுள்ளதுடன், முதல் நிலநடுக்கத்திற்குப் பிறகு பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது….

Read More

தாய்லாந்தின் புதிய பிரதமர் தெரிவு செய்யப்பட்டார்.

தாய்லாந்தின் புதிய பிரதமராக பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். 37 வயது பேடோங்டார்ன், ஃபியூ தாய் கட்சியின் தலைவர். இவர் முன்னாள் தாய்லாந்துப் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு அக்கட்சியைச் சேர்ந்த ஸ்ரெத்தா தவிசின் தாய்லாந்தின் பிரதமராகப் பதவி வகித்தார். சிறைக்கு அனுப்பப்பட்ட முன்னாள் வழக்கறிஞர் ஒருவருக்கு அமைச்சர் பதவியை வழங்கியதன் காரணமாக அவர் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பிரதமர் பதவி ஏற்று ஓராண்டுகூட ஆகாத நிலையில் ஸ்‌ரெத்தா…

Read More

எம்பொக்ஸ் நோயால் உயிரிழப்பவரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆபிரிக்காவின் சில பகுதிகளில் பரவி வரும் குரங்கு காய்ச்சல் என்ற எம்பொக்ஸ் நோய் நிலையை பொதுச் சுகாதார அவசரகால நிலையாக உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியுள்ளது. குறித்த நோய் பரவல் காரணமாக கொங்கோ குடியரசில் மாத்திரம் 450 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் எம்பொக்ஸ் நோய் நிலைமை மத்திய மற்றும் கிழக்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளில் பரவியுள்ளது. இந்த நோய் நிலைமை திரிபடைந்துள்ளதுடன் உயிரிழப்பு வீதமும் அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எம்பொக்ஸ் நோய் நிலைமை வேகமாகப் பரவுவதற்கான…

Read More

தாய்லாந்து பிரதமர் பதவியில் இருந்து நீக்கம்

தாய்லாந்து பிரதமர் ஸ்ரேதா தவிசினை பதவியில் இருந்து நீக்கி அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்நாட்டு நீதிபதி ஒருவருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற சம்பவம் தொடர்பில் சிறைச்சாலையில் இருந்து விடுதலையான சட்டத்தரணி ஒருவர் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டமையே இதற்குக் காரணம் என வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. ஸ்ரேதா தவிசின், நெறிமுறைகள் மீதான விதிகளை தீவிர நடத்தையுடன்” மீறியதாக அரசியலமைப்பு நீதிமன்றம்,  தீர்ப்பளித்துள்ளது. 67 வயதான ஸ்ரேத்தா, ஓராண்டுக்கும் குறைவான காலமே ஆட்சியில் இருந்துள்ளதுடன், 16 ஆண்டுகளில்…

Read More

சிரியாவில் நிலநடுக்கம்

சிரியாவில் உள்ள ஹமா நகரிலிருந்து கிழக்கே 28 கிலோமீற்றர் தொலைவில் 5.5 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சிரியாவின் தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. மேலும், நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு 3.7 ரிச்டர் அளவில் இலேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. எனினும் மக்களை முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு தேசிய நிலநடுக்க மையம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. ஜப்பானின் மியாசாகியில் ஏற்கெனவே 6.9, 7.1 ரிக்டர் அளவில் இருமுறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டு திரும்ப பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

பிரேசிலில் 62 பேருடன் பயணித்த விமானம் விழுந்து நொறுங்கியது.

பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தில் 62 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. நடுவானில் சென்று கொண்டிருந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து வெடித்து சிதறியுள்ளது. பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தில் வியோபாஸ் விமானமான 2283 என்ற விமானம் 62 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. வின்ஹெடோ நகரில் சென்று கொண்டிருந்த போது விமானம் நிலை தடுமாறு கீழே விழுந்து வெடித்ததை உள்ளூர் தீயணைப்புப் படை உறுதிசெய்துள்ளனர். தீப்பிளம்பாக அந்த இடமே மாறி உள்ளது. யாருடன்…

Read More