பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும் – ஈரான்

ஈரான் நாட்டில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தலைநகர் தெக்ரானில் உள்ள துருக்கி ஏர்லைன்ஸ் விமான நிறுவன அலுவலகத்தில் பணி யாற்றும் ஈரான் நாட்டை சேர்ந்த பெண்கள் ஹிஜாப் அணியாமல் பணி செய்வ தாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அந்த அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினர். இதனால் அப்போது பெண் ஊழியர்கள் ஹிஜாப் அணியாமல் இருப்பது தெரியவந்தது. துருக்கி…

Read More

தேர்தலில் இறுதி வரை போட்டியிடுவேன் பின்வாங்க மாட்டேன் – ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எக்காரணம் கொண்டும் தேர்தலில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் பைடன் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று அவரது கட்சியினரே வலியுறுத்தி வருகின்றனர். எனினும், தேர்தலில் இறுதி வரை போட்டியிடுவேன் என்று ஜோ பைடன் தெரிவித்தார். இது குறித்து பேசிய அதிபர் பைடன், “டொனால்ட் டிரம்ப்-ஐ தேர்தலில் வீழ்த்த முடியும் என்று முழுமையாக நான் நம்பவில்லை என்றால், மீண்டும் போட்டியிட மாட்டேன். ஊடகம்…

Read More

பெண்களின் லட்சியங்களுக்கு எல்லை இருக்கக்கூடாது – ரேச்சல் ரீவ்ஸ்.

பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சி மொத்தமுள்ள 650 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான 326 இடங்களையும் தாண்டி 408 இடங்களில் வெற்றி பெற்று, 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தமுள்ள 650 இடங்களில் தொழிலாளர் கட்சி 410 இடங்களிலும், ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 119 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. பிற கட்சிகள் 112 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. அதிகார மாற்றம் காரணமாக தொழிலாளர் கட்சியின் 61 வயதான கெய்ர் ஸ்டார்மர்…

Read More

பிரித்தானிய பொதுத் தேர்தலில் 22 வயது இளைஞர் சாம் வெற்றி.

சமீபத்தில் நடந்து முடிந்த பிரிட்டன் (uk) பொதுத் தேர்தலில் 22 வயது இளைஞர் ஒருவர் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொழிலாளர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்ற சாம் கார்லின் (Sam Carling) “நாடாளுமன்றத்தின் குழந்தை” என்று அழைக்கப்படுவார் என விமர்சகர்கள் கூறுகின்றனர். வடமேற்கு கேம்பிரிட்ஜ்ஷயர் தொகுதியில் 39 வாக்குகள் அதிகம் பெற்று இவர் வெற்றி பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டதாரியான சாம், சுமார் 22 ஆண்டுகள் எம்.பி.யாக பணியாற்றிய ஷைலேஷ் வராவை தோற்கடித்தார். தனது வெற்றியை “அரசியல்…

Read More

அகதிகளை ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டம் – இடைநிறுத்திய புதிய பிரதமர் ஸ்டார்மர்.

கடந்த பிரித்தானிய அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட அகதிகளை ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டம் இடைநிறுத்தப்படுவதாக புதிய பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் தனது கொள்கைகளை அறிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக குடியேறும் அகதிகளை ருவாண்டாவிற்கு அனுப்பப்படுவார்கள் என கடந்த அரசாங்கம் 2022 ஆம் ஆண்டு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

ரஷ்யாவின் பல பகுதிகளில் அவசர நிலை.

உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களால், ரஷ்யாவின் பல பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டின் வோரோனேஜ் பகுதியில் உக்ரைனால் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய பாதுகாப்பு அமைப்பால் பல ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதுடன், இந்த தாக்குதல்களால் இராணுவ உபகரணக் கிடங்கு ஒன்றில் தீப்பரவியுள்ளது. இந்நிலையில், அபாயப் பகுதிகளில் உள்ள மக்களை தற்காலிகமாக வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

Read More

14 ஆண்டு பிரதமராக இருந்தவர் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

(UTV | கொழும்பு) – ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் 14 ஆண்டு பிரதமர் பதவி வகித்த மார்க் ரூட், தன் பதவிக்காலம் நிறைவு பெற்றதும், சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்ட வீடியோ இணையத்தில் வைரல். BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

விமான சேவைகளை அதிகரிப்பதற்கு கட்டார் விமான சேவை தீர்மானம்.

(UTV | கொழும்பு) – இலங்கையின் கொழும்பை நோக்கிப் பயணிக்கும் தமது விமான சேவைகளை 5 இலிருந்து 6 ஆக அதிகரிப்பதற்கு கட்டார் விமான சேவை தீர்மானித்துள்ளது. அதிகரிக்கப்படும் 6 ஆவது விமான சேவையானது எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் அட்டவணையில் இணைக்கப்படவுள்ளது. 30 வணிக வகுப்பு இருக்கைகள் மற்றும் 281 சாதாரண வகுப்பு இருக்கைகள் கொண்ட போயிங் 787 வகை விமானத்தை கொழும்புக்கான சேவைகளுக்கு கட்டார் ஏர்வேஸ் பயன்படுத்துகிறமை குறிப்பிடத்தக்கது BE INFORMED WHEREVER…

Read More

நீர்வீழ்ச்சியிலிருந்து கீழே விழுந்த சுற்றுலாப் பயணி.

(UTV | கொழும்பு) – எல்ல பல்லேவெல நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற வெளிநாட்டு பெண்ணொருவர் கற்பாறைகளிலிருந்து கீழே விழுந்த நிலையில் பலத்த காயமடைந்துள்ளார். 19 வயதான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த குறித்த யுவதி சுற்றுலாவுக்கென குறித்த பகுதிக்கு வந்துள்ளார். அவர் எல்ல பகுதிக்கு வந்து பின்னர் மேலும் சிலருடன் எல்ல பல்லேவேல நீர்வீழ்ச்சிக்கு சென்றுற்றார். இந்நிலையில் காயமடைந்த யுவதி வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත්…

Read More

இன்று முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தம் – பாகிஸ்தானில் எரிபொருள் நெருக்கடி

(UTV | கொழும்பு) – பாகிஸ்தான் பெட்ரோலியம் வழங்குனர்கள் சங்கம் இன்று (05) முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. இவர்களது பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் தீர்வு இன்றி நிறைவடைந்ததை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. வேலைநிறுத்தத்தின் போது நாடு முழுவதும் உள்ள 13,000 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் செயற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வரி காரணமாக இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. BE INFORMED…

Read More