ஹொண்டுராஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிச் சூடு தொடர்பான குற்றச்சாட்டின் பெயரில் ஹொண்டுராஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜுவான் ஆர்லாண்டோ ஹெர்னாண்டஸுக்கு 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை அமெரிக்க நீதிபதி ஒருவர் இன்று வழங்கினார். இதனையடுத்து 55 வயதான ஹெர்னாண்டஸ், அவர் எதிர்பார்க்கும் மேல்முறையீடு வெற்றிபெறும் வரை, தமது வாழ்நாள் முழுவதையும், சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் மன்ஹாட்டன் நீதிமன்றம், கடந்த மார்ச் மாதம் அவரை குற்றவாளியாக அறிவித்தது. கடத்தல்காரர்களுக்குச் சொந்தமான போதைப்பொருள் ஏற்றுமதிகளைப்…

Read More

இலங்கை நோக்கி வந்த விமானம் கடத்தப்பட்டுள்ளது!!!

காம்பியாவை தளமாகக் கொண்ட குத்தகை நிறுவனமான மக்கா இன்வெஸ்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு ஏர்பஸ் ஏ340 விமானங்களை அடையாளம் தெரியாத தரப்பினர் ஈரானில் தரையிறக்கி வெற்றிகரமாக கடத்தியுள்ளனர். குறித்த விமானங்கள் லிதுவேனியாவில் இருந்து பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கைக்கு வரவிருந்த நிலையில், ஈரானில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானங்களில் ஒன்று மெஹ்ராபாத் விமான நிலையத்தில் தரையிறங்கியதாகவும், மற்றொன்று தெற்கு ஈரானில் உள்ள சார்பஹாரில் உள்ள கொனாரக் விமான நிலையத்தில் தரையிறங்கியதாகவும் லிதுவேனிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இரண்டு விமானங்களும் ஈரானிய வான்பரப்பிற்குள்…

Read More

இம்முறை 1300 ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளனர்!!

இந்த மாத தொடக்கத்தில் இருந்து சவுதி அரேபியாவில் நிலவி வரும் கடும் வெப்பத்தால் மக்காவில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் ஹஜ் பயணம் சென்ற பலர் வெயில் தாக்கத்தை தாங்க முடியாமல் உயிரிழந்தனர். இந்நிலையில் சவூதி அரேபியாவில் வெப்ப அலை காரணமாக 1300 ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளதாக சவுதி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் பகத் அல் ஜலாஜெல் கூறும்போது, ஹஜ் பயணம் சென்ற யாத்ரீகர்கள் இறப்பு எண்ணிக்கை 1,301-ஐ எட்டி உள்ளது….

Read More

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர பிரித்தானியா முடிவு

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர பிரித்தானியா முடிவு செய்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். தமது எக்ஸ் தளத்தில் குறிப்பொன்றையிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  ஐக்கிய இராச்சியத்தின் “தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு ஆணையம்” தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. அந்நாட்டின் உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையிலான இந்த ஆணையம், பிரித்தானிய நாடாளுமன்றத்தால் நிறுவப்பட்ட ஒரு சுயாதீன நீதிமன்றமாகும்

Read More

ஹஜ் சென்ற அக்கறைப்பற்று நபர் மரணம்

இணைப்பு: குறித்த நபர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹஜ் யாத்திரைக்குச் சென்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஜெட்டாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த மர்ஹூம் அல்-ஹாஜ் ஆதம் லெப்பை அப்துல் கஃபூர் என்ற 68 வயதான குறித்த நபர் ஹஜ் யாத்திரைக்குச் சென்ற நிலையில் மக்காவில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்றப்பட்ட நிலையில். வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடதையடுத்து உயிரிழந்தார். இவரின் ஜனாஸா மக்காவில்…

Read More

குவைத்தில் பாரிய தீ விபத்து 35 பேர் பலி

குவைத் மங்காப் நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 35 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தீ விபத்து இன்று (12) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளமையால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக குவைத் துணைப் பிரதமர் ஷேக் ஃபஹத் யூசுப் சவுத் அல்-சபா தீக்கிரையாகிய கட்டடத்தை நேரில் சென்று பார்வையிட்ட போது குறிப்பிட்டுள்ளார். மேலும், கட்டட உரிமையாளர்களின் பேராசை இதுபோன்ற விபத்துக்களுக்கு…

Read More

மலாவியின் துணை ஜனாதிபதி பயணித்த இராணுவ விமானம் காணாமல் போயுள்ளது!

தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ் சிலிமா பயணித்த இராணுவ விமானம் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மலாவி தலைநகர் லிலாங்வேயில் இருந்து துணை ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ் சிலிமா (51) மற்றும் 9 பேருடன் திங்கட்கிழமை காலை புறப்பட்ட மலாவி பாதுகாப்பு படை விமானம், ரேடாரில் இருந்து வெளியேறியதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ரேடாரில் இருந்து விலகியதில் இருந்து விமானத்துடன் தொடர்பு கொள்ள விமான அதிகாரிகளின்…

Read More

பாராளுமன்றத் கலைத்த பிரான்ஸ் ஜனாதிபதி!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் அந்நாட்டு பாராளுமன்றத்தை கலைத்துள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்த அவர், ஜூன் 30 மற்றும் ஜூலை 7ஆம் திகதிகளில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். பெரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு சில வாரங்களுக்கு முன்னர் இரண்டு சுற்றுகளாக வாக்கப்பதிவு நடத்தப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

IS என்ற நபர்களை போலியாக காட்ட முனைந்த மற்றுமொரு சதி அம்பலம்!

இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் என காட்டுவதற்காக போலியான காணொளி ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த காணொளிக்காக நான்கு சந்தேகநபர்களும் சத்தியப்பிரமாணம் செய்யும் சூழ்ச்சி காணொளியொன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பொதுவாக, ஐ.எஸ். பயங்கரவாதிகள் வலது கை கட்டை விரலை உயர்த்தி சத்தியப்பிரமாணம் செய்வார்கள் எனவும், இந்தியாவில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் வெளியான காணொளியில் இடது கையை உயர்த்தி தவறான காணொளி எடுக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரின் தலைவன் என…

Read More

மோடியின் பதவிப்பிரமாணம் ஒத்திவைப்பு – வெளியான காரணம்

இந்தியாவின் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடிதலைமையிலான அமைச்சரவையை நியமிப்பதில் பல்வேறுப்பட்ட நெருக்கடிகள் தோன்றியுள்ளன. இந்நிலையில் பதவிப் பிரமாண நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புதிய பிரதமராக நரேந்திர மோடி இன்று (08) பதவியேற்பதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வாறான நிலைமை காரணமாக பதவியேற்பு 09ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சந்திர பாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் நடவடிக்கைகளே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. வழங்கப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் 07 அமைச்சரவை…

Read More