ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதலாவது இலங்கைத் தமிழர் தர்ஷன் செல்வராஜா

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான ஒலிம்பிக் சுடரை இலங்கையரான தர்ஷன் செல்வராஜா பாரிஸில் நேற்று முன்தினம் ஏந்திச் சென்றார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் சுடரை ஏந்திச் சென்ற முதல் இலங்கையராக தர்ஷன் செல்வராஜா வரலாறு படைத்துள்ளார் என பிரான்ஸிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளதுடன், இது இலங்கைக்கு பெருமையான தருணம் எனவும் தெரிவித்துள்ளது. பாரிஸ் 2024 ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்வதற்கு தெரிவுசெய்யப்பட்ட புகழ்பெற்ற பிரெஞ்சு பிரஜைகளில் தர்ஷன் செல்வராஜாவும் ஒருவராவார். இப்போட்டிக்காக, கிறீஸின்…

Read More

ஒலிம்பிக் போட்டிகளில் ஹிஜாப் அணிவதற்கு தடை

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் போது முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாபை பிரான்ஸ் நாட்டு வீராங்கனைகள் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில், பிரான்ஸ் விளையாட்டு அமைச்சர் Amelie Oudea-Castera அத்தகைய முடிவை அறிவித்தார். ஐரோப்பாவில் முஸ்லிம்கள் சிறுபான்மையினரில் ஒருவராக இருந்தாலும், பெரும்பாலான உள்நாட்டு விளையாட்டுப் போட்டிகளில் வீராங்கனைகள் ஹிஜாப் அணிவார்கள். ஆனால், ஐரோப்பாவில் இதுபோன்ற முடிவை எடுத்த ஒரே நாடு பிரான்ஸ் மட்டுமே. இதனால் கடும் விமர்சனங்களும், எதிர்ப்புகளும் கிளம்பும் என்று கூறப்படுகிறது.

Read More

எந்தவொரு மனிதனுக்கும் கடினமான நேரங்கள் வரலாம் – வனிந்து ஹசரங்க.

தம்மீது வீசப்படும் சவால்களை எதிர்கொண்டு எதிர்காலத்திலும் அணிக்காக விளையாட எதிர்ப்பார்த்துள்ளதாக கண்டி அணித்தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார். தம்புள்ளை சிக்ஸர் அணிக்கு எதிரான போட்டியின் பின்னர் நேற்று (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “எந்தவொரு விளையாட்டு வீரருக்கும், எந்த மனிதனுக்கும் அவர்களின் வாழ்க்கையில் கடினமான நேரங்கள் வரலாம். நான் அவர்களை ஒவ்வொன்றாக எதிர்கொள்கிறேன். என்னால் என்ன செய்ய முடியும் என்று எனக்குத் தெரியும். நான் என்ன செய்தேன் என்று…

Read More

ஐசிசி வருடாந்த பொதுக்கூட்டம் இந்த ஆண்டு இலங்கையில்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுக் கூட்டம் இந்த ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ளது. பொதுக் கூட்டம் ஜூலை 19 முதல் 22 வரை நடைபெற உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா, கிழக்கு ஆசியா பசிபிக் மற்றும் ஐரோப்பா போன்ற பிராந்தியங்களை உள்ளடக்கிய உலகெங்கிலும் உள்ள 108 ஐசிசி உறுப்பு நாடுகளில் இருந்து 220 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த கிரிக்கெட் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளர்.

Read More

நான்காவது முறையாகவும் ஸ்பெயின் அணி செம்பியன்.

2024ம் ஆண்டின் யூரோ கால்பந்தாட்ட கிண்ணத்தை ஸ்பெயின் அணி கைப்பற்றியுள்ளது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 2 – 1 என தோற்கடித்த ஸ்பெயின் வெற்றி மகுடம் சூட்டியுள்ளது. இதற்கமைய நான்காவது முறையாகவும் யூரோ கால்பந்தாட்ட கிண்ணத்தை ஸ்பெயின் அணி கைப்பற்றியுள்ளமை விசேட அம்சமாகும். 1964, 2008 மற்றும் 2012ம் ஆண்டுகளிலும் ஸ்பெயின் கிண்ணத்தை தம்வசப்படுத்தியது. நான்கு முறை குறித்த கிண்ணத்தை வென்ற முதல் அணியாகவும் ஸ்பெயின் கால்பந்தாட்ட அணி வரலாற்றில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஒரே பந்தில் 13 ஓட்டங்கள் – உலக சாதனை படைத்த ஜெய்ஷ்வால்.

சிம்பாப்வே – இந்திய அணிகளுக்கு இடையிலான 5 ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 167 ஓட்டங்களை பெற்றது. இதனையடுத்து 168 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சிம்பாப்வே அணி 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20…

Read More

வனிந்து ஹசரங்கவுக்கு 11 இலட்சம் அபராதம்.

எல்.பி.எல் கிரிக்கெட் தொடரில் சட்டவிரோதமாக ஆடைகளை பயன்படுத்திய குற்றச்சாட்டில் Kandy Falcons அணியின் தலைவர் வனிந்து ஹசரங்கவுக்கு 3600 அமெரிக்க டொலர்கள் (இலங்கை மதிப்பில் 11 இலட்சம் ரூபா) அபராதம் விதிக்க போட்டிக்குழு தீர்மானித்துள்ளது. வனிந்து ஹசரங்க இந்த ஆண்டுக்கான போட்டியில் பெற்ற போட்டி கட்டணத்தில் இருந்து இந்த அபராதத்தை வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்போட்டியில் பங்குபற்றிய அனைத்து வீரர்களுக்கும் அந்தந்த அணிகளின் நிறங்களில் ஆடைகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்ட நிலையில், வனிந்து ஹசரங்க வித்தியாசமான சின்னத்துடன் கூடிய…

Read More

ஓய்வை அறிவித்தார் பிரபல மல்யுத்த வீரர் ஜோன்சீனா.

WWE மல்யுத்த போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக பிரபல மல்யுத்த வீரர் ஜோன்சீனா அறிவித்துள்ளார். WWE மல்யுத்த போட்டிகளிலில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்களில் குறிப்பிடத்தக்க ரசிகர்களை கொண்டவர் ஜோன்சீனா. இவரின் பெயரை கேட்டாலே, 90-ஸ் கிட்ஸ் மனங்களில் மகிழ்ச்சி ஏற்படும் என்றே கூறலாம். அவர் களத்திற்குள் எண்ட்ரி கொடுக்கும் ஸ்டைல் மிகவும் பிரபலம் ஆகும். 16 முறை WWE செம்பியன் பட்டம் வென்றுள்ள ஜோன்சீனா, WWE போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். கனடா நாட்டின் டொரோண்டோவில் நடைபெற்ற…

Read More

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சனத் ஜயசூரிய!

(UTV | கொழும்பு) –    இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சனத் ஜயசூரிய தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றிய கிறிஸ் சில்வர்வுட்டின் ஒப்பந்தக் காலம் கடந்த இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை வீரர்  சனத் ஜயசூரிய தற்காலிக  தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக சிறிலாங்க கிரிக்கெட் அறிவித்துள்ளது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

தனது கடைசி யூரோ தொடர் : கிறிஸ்டியானோ ரொனால்டோ 

(UTV | கொழும்பு) –    நடைபெற்று வரும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான யூரோ காற்பந்துத் தொடரே (Euro League) தனது கடைசி யூரோ தொடர் என போர்த்துக்கல் (Portugal) காற்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ  தெரிவித்துள்ளார். ரொனால்டோ கடந்த இருபது வருடங்களாக யூரோ காற்பந்துத் தொடர்களில் விளையாடி வருகின்றார். ஸ்லோவேனியா (Slovenia) அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில் மிகுதி நேரத்தில் கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை தவறவிட்ட ரொனால்டோ, மைதானத்திலேயே கண்கலங்கினார். எவ்வாறாயினும், இரு அணிகளும் கோல் எதனையும் போடாததால்…

Read More