நிலைப்பேறான பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முயற்சியை நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பித்துள்ளது

(UDHAYAM, COLOMBO) – நல்லாட்சி அரசாங்கம் நிலைப்பேறான பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முயற்சியை ஆரம்பித்துள்ளதென தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையமும், பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவும் ஏற்பாடு செய்திருந்த முதலீட்டு மாநாட்டில் நேற்று இவ்வாறு உரையாற்றினார். அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், புதியதொரு இலங்கையை கட்டியெழுப்பும் நோக்கமாக அரசாங்கம் விசேட பொருளாதார திட்டங்களை அறிமுகம் செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா…

Read More

புதிய 25 கைத்தொழில் துறைகள் அபிவிருத்தி

(UDHAYAM, COLOMBO) – நாட்டில் புதிய 25 கைத்தொழில் துறைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக தென்மாகாண கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. சிறிய அளவிலான தொழில்துறையினர் மற்றும் கிராம சுயதொழில் வாய்ப்பை மேம்படுத்துவதற்காக தென்மாகாண கைத்தொழில் அமைச்சு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த அபிவிருத்திதிட்டங்களுக்காக மாகாண சபை 43 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. கடற்றொழில், கால்நடை உற்பத்தி, கைப்பணி போன்ற துறைகளில் கூடுதலான கவனம் செலுத்தப்படுமென்று தென்மாகாண அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

இலங்கையில் மீன் வளர்ப்பு துறையை அபிவிருத்தி செய்ய 375 மில்லியன் ரூபா நிதி

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் மீன் வளர்ப்பு துறையை அபிவிருத்தி செய்ய 375 மில்லியன் ரூபா நிதி உதவியை தென்கொரிய அரசாங்கம் வழங்கவுள்ளது. கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கல் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சிக்கும், தென்கொரியாவின் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த நிதி உதவிக்கான அறிவிப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இரண்டு கடற்றொழில் தொழில்நுட்பக் கல்லூரிகளை இலங்கையில் நிறுவவும் தென்கொரியா இணக்கம் வெளியிட்டுள்ளது. வடக்கிலும், தெற்கிலும் இந்த கடற்றொழில் தொழில்நுட்பக் கல்லூரிகள் அமைக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர்…

Read More

இலங்கையுடனான பொருளாதார தொடர்புகளை அதிகரிக்க தென்கொரியா விருப்பம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கையுடனான பொருளாதார தொடர்புகளை அதிகரிக்க தென்கொரியா விருப்பம் வெளியிட்டுள்ளது. இலங்கை வந்துள்ள தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் பையாங் சீ இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது இலங்கைக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான பொருளாதார தொடர்பு வருடாந்தம் 300 மில்லியன்டொலர்களாக நிலவுகிறது. இதனை 500 மில்லியன் டொலர்கள் வரையில் அதிகரிக்க விருப்பம் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Read More

பில்ட் ஸ்ரீலங்கா 2017 கண்காட்சி

(UDHAYAM, COLOMBO) – பில்ட் ஸ்ரீலங்கா 2017 (Build SL 2017 )என்ற வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை கண்காட்சி கொழும்பு பண்டரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை கட்டட நிர்மாண கைத்தொழில் சபை ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சி மே மாதம் 26ம் 27ம் 28ம் திகதி வரை மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. 3வது முறையாக நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் வீடு மற்றும் கட்டட நிர்மாணத்துறைக்கு உட்பட்ட சுமார் 300 நிறுவனங்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான பொருளாதாரத் தொடர்பு

(UDHAYAM, COLOMBO) – இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான பொருளாதாரத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்த இணக்கம் காணப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளின் ஜனாதிபதிகளுக்கும் இடையில் நேற்று சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன்போது இந்த இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய திட்டங்களை அமுலாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read More

வடக்கு கிழக்கில் முயற்சியான்மைகளை அதிகரிக்க நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறுதொழில் முயற்சியான்மைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி சுமார் ஆயிரத்து 785 சிறுமுயற்சியான்மைகள் அங்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, தேசிய ஒருமைப்பாடு மற்றும் மறுசீரமப்பு அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தல் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Read More

தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஈரான் விருப்பம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கையின் சந்தையில் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வதறகு  தமது  நாடு விருப்பம் கொண்டிருப்பதாக ஈரான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மொஹமட் ஜவாட் சரீப்  தெரிவித்தார். சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் இடம்பெற்ற சந்திப்பின் போதே  அவர்இதனை குறிப்பிட்டார் . ஈரான் நாட்டைச்சேர்ந்த தனியார் நிறுவனங்கள் இலங்கையுடன் வர்த்தக நடவடிக்கைகளை பரிமாறிக்கொள்வதற்கும் தொழில்நுட்பம்  மற்றம் பொறியில் துறையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கும் விருப்பத்துடன் இருப்பதாகவும் ஈரான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்…

Read More

அனைவரும் இணைந்து விவசாயத்துறையை வளப்படுத்த வேண்டும் – நஸீர் அஹமட்

(UDHAYAM, COLOMBO) – கிழக்கு மாகாணம் 70 சதவீதம் விவசாயத்தை நம்பியிருப்பதால் அனைவரும் இணைந்து விவசாயத்துறையை  வளப்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். ஏறாவூர் றஹ்மானியா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார். பெரும்போக சிறுபோக நெற்செய்கை, சேனைப் பயிர்ச் செய்கை, கால் நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு உள்ளிட்ட ஏனைய விவசாயத்தோடு சம்பந்தப்பட்ட வாழ்வாதார பொருளீட்டல்களில் கிழக்கு மாகாண மக்கள் ஈடுபடுகின்றார்கள். எனவே, விவசாயத்தை…

Read More

மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டமை குறித்து கவலை

(UDHAYAM, COLOMBO) – கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 48 வகையான மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டமை குறித்து ஒளடத வரத்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் கவலை வெளியிட்டுள்ளன. இந்த விலைக் குறைப்பு காரணமாக தாம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் இந்த அமைச்சை சேர்ந்தவர்கள் பேச்சுவார்தை நடத்திவருகின்றனர். இதற்கமைய இலங்கை வர்த்தக சம்மேளனம் தேசிய மருந்தக ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தலைவர் அசித்த டி சில்வாவுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது….

Read More