கொழும்பில் சேரும் பெருந்தொகை குப்பைக்கு மாதாந்தம் இத்தனை கோடி ரூபாவா?

(UTV|COLOMBO)-கொழும்பு நகரில் நாாளாந்தம் சேரும் குப்பைகளை முகாமைத்துவம் செய்வதற்காக பல கோடி ரூபா செலவிடப்படுவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. முகாமைத்துவ நடவடிக்கைக்காக மாதாந்தம் 10 கோடியே 80 லட்சம் ரூபா மாதாந்தம் செலவிடப்படுவதாக மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். நகரத்தில் தினசரி 600 மெட்ரிக் டன் குப்பை சேர்க்கப்படுகிறது. ஒரு டன் குப்பைக்கு 6000 ரூபா செலவிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்டத்தின் 6 பொறியியல் அலுவலக போக்குவரத்திற்காக தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் இரண்டிற்கு…

Read More

கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் இந்நாள் அமைச்சருமான அர்ஜுன மீது பாலியல் குற்றச்சாட்டு…

(UTV|COLOMBO)- இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய அமைச்சருமான அர்ஜுன ரணதுங்கா மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது. இந்திய விமானப் பணிப்பெண் ஒருவர் கடந்த 10ம் திகதி முகநூல் பக்கத்தில், இந்திய ஹோட்டல் ஒன்றில் நீச்சல் குளம் அருகே ரணதுங்கா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி உள்ளார். “ஹோட்டலின் நீச்சல் குளம் அருகே நடந்து சென்ற போது ரணதுங்கா என் இடுப்பை பிடித்து கொண்டு இழுத்து, என் மார்பின் பக்கமாக கைகளை கொண்டு…

Read More

நாய்கள் சிறுநீர் கழிக்க சாலையில் வைக்கப்பட்ட டொனால்டு டிரம்ப் சிலை…

(UTV|AMERICA)-அமெரிக்காவில் நாய்கள் சிறுநீர் கழிப்பதற்காக அந்நாட்டு ஜனாதிபதி டிரம்பின் சிலை வைக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் புருக்ளின் பகுதியில் உள்ள சாலையோரத்தில் சிறிய அளவில் புல் வளர்க்கப்பட்டு அதில் சுமார் ஒரு அடி உயரமுள்ள டிரம்ப்பின் மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது. அதன்கீழ் பகுதியில் ”என்மீது சிறுநீர் கழிக்கவும்” என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை பில் கேப்லே என்பவர் வடிவமைத்து வைத்துள்ளார். அவர் கூறுகையில், டிரம்ப் ஒரு ஜனாதிபதியாக செயல்படவில்லை என்ற…

Read More

இளவரசர் ஹரி-மெர்க்கல் ஜோடி 3 ஆண்டுகளுக்குள் விவாகரத்து?

(UTV|LONDON)-பிரித்தானியா இளவரசர் ஹரி மற்றும் மெர்க்கல் ஜோடி இரண்டரை ஆண்டுகளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் விவாகரத்து செய்யலாம் என்று சைமன் சிம்மன்ஸ் என்ற பெண் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். இளவரசர் ஹரி, அமெரிக்க நடிகையான மேகன் மெர்க்கலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் இந்த ஜோடி பல இடங்களுக்கு சென்று வருகின்றனர். எந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றால் கூட இருவரும் ஒன்றாகவே கையை பிடித்துக் கொண்டு தான் செல்கின்றனர். அந்தளவிற்கு இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து…

Read More

திருமணமான அடுத்த நாளே மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

(UTV|COLOMBO)-அனுராதபுரத்தில் திருமண ஒரு மாத காலத்திற்குள் கணவனுக்கு எதிராக மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தம்புத்தேகம பிரதேசத்தில் ஒரு வருட காதலின் பின்னர் திருமண பந்தத்தில் இருவரும் இணைந்துள்ளனர். திருமணத்தின் பின்னர் இளைஞன், மனைவியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். எனினும் திருமணத்தின் பின்னர் எந்தவொரு தொழிலுக்கும் செல்லாமல் கணவன் வீட்டில் இருந்துள்ளார். எவ்வித வருமானமும் அந்த குடும்பத்திற்கு கிடைக்கவில்லை. திருமணத்தின் முன்னர் தொழில் செய்த இளைஞன், அதன் ஊடாக கிடைத்த வருமானத்தில்…

Read More

5 லட்சத்துக்கும் அதிகமானோரின் தகவல்கள் திருட்டு…

(UTV|AMERICA)-‘கூகுள்’ தேடல் இணையதளம், தமிழரான சுந்தர்பிச்சை தலைமையில் இயங்குகிறது. இந்த இணையதளத்தின் ஒரு அங்கம் ‘கூகுள் பிள்ஸ்’ சமூக வலைத்தளம். இது 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ந் தேதி தொடங்கப்பட்டது. ஆனால் ‘பேஸ் புக்’ சமூக வலைத்தளத்தின் வளர்ச்சியுடன் ஈடுகொடுக்க முடியாத நிலையில் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது ‘கூகுள் பிளஸ்’ சமூக வலைத்தள உபயோகிப்பாளர்கள் 5 லட்சத்துக்கும் அதிகமானோரின் அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது…

Read More

கால நேரம் நீதிமன்றங்களில் ஏறி இறங்கியே கழிகின்றது…

(UTV|COLOMBO)-கோட்டாபய ராஜபக்ஷ அவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தாலும், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து நீண்ட கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்ட பின்னரே தீர்மானிக்கப்படும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். பசில் ராஜபக்ஷதான் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருந்த கருத்துக் குறித்து ஊடகவியலாளர்கள் வினவியதற்கே பசில் ராஜபக்ஷ இவ்வாறு கூறினார். இதுவரையில் எந்தவித தீர்மானமும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எடுக்கப்படவில்லை. எமது கால நேரம் நீதிமன்றங்களில் ஏறி இறங்கியே கழிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.  …

Read More

பாராளுமன்றத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கல்வி அமைச்சர்.

பாராளுமன்றில் அமைச்சர் ஒருவர் தெரிவித்த தகவல் குறித்து பல்வேறு ஊடகங்களும் முன்னிலைப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வாகன நெரிசலினால் பாராளுமன்றத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது மழையில் நனைந்தபடி பாராளுமன்றம் வந்ததாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அடைமழையில் நனைந்தபடி ராஜகிரியவில் இருந்து பாராளுமன்றத்திற்கு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற வீதியில் ஏற்பட்ட வாகன போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்த…

Read More

அரசாங்கத்தின் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மஹிந்தவுக்கு வழங்கப்பட வேண்டும்

(UTV|COLOMBO)-அரசாங்கத்தின் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸின் இல்லத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இடைக்கால அரசாங்கமொன்றை நிறுவும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை…

Read More

பசில் ராஜபக்ஷ தான் ஜனாதிபதி வேட்பாளர்?

(UTV|COLOMBO)-கூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவையே தான் பிரேரிப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். டி.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியக நிர்மாணத்தின் போது அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிராக வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் கலந்துகொள்வதற்காக நீதிமன்றத்துக்கு வருகை தந்தபின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். எனக்கும் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்துவதற்கே…

Read More