இலங்கையில் பேஸ்புக் தடை?-அதிர்ச்சியில் இளைஞர், யுவதிகள்

(UTV|COLOMBO)-இலங்கையில் பேஸ்புக் தடை ஒன்றை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரச தகவல் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் எதிர்கால சந்ததியினருக்கு சமூகவலைத்தளங்களினால் ஏற்படவுள்ள அழுத்தங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதன் காரணமாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை இலங்கையில் தடை செய்ய தீர்மானிக்கப்பட்டு வருவதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திரானி பண்டார தெரிவித்துள்ளார்.. சீனா உட்பட பல நாடுகளில் இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். சிறுவர் தினத்தை முன்னிட்டு அலரி…

Read More

யுத்தத்தை முடிவு செய்தது யார்? எவ்வாறு?-இந்நாட்டிலுள்ள சிறிய பிள்ளைகள் நன்கு அறியும்…

(UTV|COLOMBO)-வடக்கு, கிழக்கில் யுத்தத்தை எவ்வாறு முடிவு செய்தோம் என்பதற்கு முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா கூறிய அதே கருத்தைத் தான் தானும் கூறவேண்டியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். அன்று யுத்தத்தை முடிவு செய்தது யார்? எவ்வாறு? என்பதை இந்நாட்டிலுள்ள சிறிய பிள்ளைகள் கூட நன்கு அறிந்துள்ளனர். யுத்தத்தை முடிவு செய்தது எவ்வாறு என்பதற்கு யாரும் புதிதாக விளக்கம் கூற வேண்டியதில்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி நிவ்யோர்க்கிலுள்ள இலங்கையர்களிடத்தில் இறுதி யுத்தம் தொடர்பாக தெரிவித்திருந்த…

Read More

மது குடித்த 27 பேர் பலி?

(UTV|IRAN)-ஈரானில் 1979-ம் ஆண்டு முதல் மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது. இதனை மீறி மது குடிப்பவர்களுக்கு கசையடி மற்றும் அபராதம் விதிக்கப்படும். இருந்த போதிலும் அந்நாட்டு மக்கள் கள்ளச்சந்தையில் கிடைக்கும் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட மற்றும் வீட்டிலேயே தயார் செய்யப்பட்ட மதுபானங்களை வாங்கி குடிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர். இந்த நிலையில் ஹோர்மோஸ்கான், வடக்கு கோர்சன், அல்போர்ஸ், கோஹிலயா மற்றும் போயர் அஹ்மத் ஆகிய மாகாணங்களில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களை வாங்கி குடித்த 27…

Read More

மேலாடையின்றி பாட்டு பாடிய செரீனா வில்லியமஸ்?

(UTV|AMERICA)-அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாதமாக கருதப்படுகிறது. இதனையொட்டி அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியமஸ், மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பாடல் ஒன்றை பாடி அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். ’ஐ டச் மைசெல்ப்’ பாடலை பாடி பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை அவர் மேற்கொண்டுள்ளார். ’ஐ டச் மைசெல்ப்” பாடலை எழுதியது ஆஸ்திரேலியாவின் டிவின்ல்ஸ் என்பவர். அவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மார்கப்புற்றுநோயால் 53 வயதில்…

Read More

கிம்முடன் காதலில் விழுந்த டிரம்ப்…

(UTV|AMERICA)-அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் எதிரிகளாக இருந்து, இப்போது நண்பர் களாக மாறி இருக்கிறார்கள். இருவரும் சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல்முதலாக உச்சிமாநாட்டில் சந்தித்து பேசினார்கள். உலகையே வியக்க வைத்த இந்த பேச்சு வார்த்தையின்போது, கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதங்கள் இல்லாத பிரதேசமாக மாற்றுவதற்கு கிம் ஜாங் அன் ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக டிரம்புடன் ஒரு ஒப்பந்தமும் செய்து கொண்டார். அது மட்டுமின்றி, மீண்டும் உச்சி…

Read More

பிரதமர் மாளிகையில் இருந்த எருமைகள் ரூ.23 லட்சத்துக்கு ஏலமா?

(UTV|PAKISTAN)-பாகிஸ்தானில் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்ற பிறகு சிக்கன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இருந்த 61 ஆடம்பர கார்கள் கடந்த வாரம் ஏலம் விடப்பட்டன. அதன் மூலம் ரூ.20 கோடி வருமானம் கிடைத்தது. மேலும் கூடுதலாக உள்ள 102 கார்கள், புல்லட் புரூப் வாகனங்கள் மற்றும் 4 ஹெலிகாப்டர்கள் ஏலம் விடப்பட உள்ளன. இந்த நிலையில் பிரதமர் மாளிகையில் உள்ள 3 எருமை மாடுகள் மற்றும் 5 கன்றுகளை ஏலம் விட முடிவு செய்யப்பட்டிருந்தது….

Read More

கார் கதவை தானே சாத்திய இளவரசி மேகன் மார்க்கல்…

(UTV|LONDON)-நாம் காரில் இருந்து இறங்கியவுடன், கார் கதவை நாமே சாத்துவது அனிச்சை செயலான ஒன்று. ஆனால், இங்கிலாந்து இளவரசி மேகன் மார்க்கல், கார் கதவை அவரே சாத்தியது, இங்கிலாந்து மக்களை அதிர்ச்சியிலும், பிரமிப்பிலும் ஆழ்த்தி உள்ளது. இங்கிலாந்து பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாகவும் ஆகி உள்ளது. ஏனென்றால், பாதுகாப்பு காரணங்களுக்காக, அரச குடும்பத்தினர், கார் கதவை தாங்களே சாத்துவது இல்லை. இளவரசர் சார்லஸின் மகன் இளவரசர் ஹாரியை மணந்தவர்தான், மேகன் மார்க்கல். அவருக்கு வயது 37. அமெரிக்க நடிகையாக…

Read More

ரயில்வே கட்டணங்கள் அதிகரிப்பு?

(UTV|COLOMBO)-ரயில் கட்டணத்தை எதிர்வரும் திங்கட்கிழமை (01) முதல் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. திறைசேரியின் ஆலோசனைக்கமைய ரயில்வே திணைக்களம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த கட்டண மறுசீரமைப்பு 10 வருடங்களின் பின்னரே முன்னெடுக்கப்படுவதாகவும், கட்டண அதிகரிப்பின் பின்னரும் ரயில்வே கட்டணங்கள் பஸ் கட்டணத்திலும் பார்க்க குறைவாகவே காணப்படுவதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv…

Read More

உயிராபத்தைக் காட்டி என் பயணத்தை நிறுத்த முடியாது

(UTV|COLOMBO)-எங்களைச் சிறையில் போட்டு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றதோ தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தங்களுக்கும் தங்களது குடும்பத்துக்கும் உயிராபத்து உள்ளதாக வெளியாகியுள்ள கருத்துக் குறித்து தாங்கள் என்ன கருதுகின்றீர்கள் என அவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இதனைக் கூறினார். மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபுர்வ இல்லத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டார். நான் உயிராபத்துக்கு அஞ்சி கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் இருப்பேன் என்று…

Read More

ரூ.123 கோடி செலவில் தயாரான தங்கம் மற்றும் வைரக்கற்களாலான ஷுக்கள் …

(UTV|DUBAI)-ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் உலகிலேயே மிக அதிக விலையிலான ஒரு ஜோடி ‘ஷு’க்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தங்கம் மற்றும் வைரக்கற்களால் தயாரான ‘ஷு’ க்களின் மதிப்பு ரூ.123 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகிலேயே மிக அதிக விலை உயர்ந்த ‘ஷு’ என்ற பெருமை பெற்றுள்ளது. அந்த ‘ஷு’ க்களில் நூற்றுக்கணக்கான வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதை ஜெட்டா துபாய் நிறுவனமும், பாசியன் ஜுவல்லரியும் இணைந்து தயாரித்துள்ளன. அதற்கு 9 மாத காலம் ஆனது. புர்ஸ்…

Read More