பிரபல நடிகருக்கு ஏற்பட்ட சோகம்!! திடீர் மரண சம்பவம்.. ; திரையுலக பிரபலங்கள் இரங்கல்

(UDHAYAM, KOLLYWOOD) – நெடுஞ்சாலை’ படத்தின் நாயகன் ஆரியின் தாயார் திடீர் மரணம் அடைந்துள்ளார்.

‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ ‘நெடுஞ்சாலை’ ‘மாயா’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவர் ஆரி.

இவரது சொந்த ஊர் பழனி ஆகும்.

சினிமாவில் நடிப்பதற்காக சென்னையில் வந்து குடியேறி படங்களில் நடித்து வருகிறார்.

இவரது பெற்றோர் பழனியில் வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஆரியின் தாயார் முத்துலட்சுமி இன்று அதிகாலை 3 மணியளவில் புதுக்கோட்டையில் காலமானார்.

அவரது உடல் சொந்த ஊரான பழனிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு, அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறவிருக்கிறது.

இந்த நிகழ்வு நாளை காலை பழனியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆரி, தற்போது திண்டிவனம் அருகே படப்பிடிப்பில் இருந்துள்ளார். தன்னுடைய அம்மா இறந்த செய்தி கேட்டதும் நேராக பழனி விரைந்துள்ளார்.

ஆரியின் தாயார் மறைவுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *