கேளிக்கை

பிரபல நடிகை காலமானார்!! நடிகர் சங்க உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை

(UDHAYAM, CHENNAI) – பழம்பெரும் பிரபல நடிகையான கே.ஆர்.இந்திரா நேற்றைய தினம் சென்னையில் காலமானார்.

பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் அனுராதாவின் அக்காவும், டப்பிங் ஆர்டிஸ்ட் ஜெய கீதாவின் தாயாரும் கலைமாமணி பட்டம் பெற்ற பழம்பெரும் நடிகையுமான கே.ஆர்.இந்திரா நேற்று காலமானார்.

அவருக்கு வயது 65. இவர் ‘கொஞ்சும் குமாரி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதே படத்தில் தான் பழம்பெரும் நடிகையான மனோகரமாவும் அறிமுகமானார்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த ‘பெற்றால் தான் பிள்ளையா’ படத்தில் நடிகர் நம்பியாருக்கு ஜோடியாக நடித்தார்.

‘ஹலோ ஆச.ஜமீன்தார்’ படத்தில் எம்.ஆர்.ராதாவுக்கு ஜோடியாக நடித்த அனுராதா, ‘கந்தன் கருணை’, ‘சிந்து பைரவி’ ரஜினிகாந்த் நடித்த ‘மன்னன்’ ‘பணக்காரன்’ உள்ளிட்ட 250-க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் நடித்த கடைசி படம் ‘கிரிவலம்’.

இப்படத்தில் இவர் நடிகர் ரிச்சர்டின் பாட்டியாக நடித்துள்ளார்.

இவருடைய தந்தை கே.எஸ்.ராமசாமி. பிரபல கர்நாடக பாடகர் மற்றும் நாடக நடிகர்.

நடிகர் சங்க உறுப்பினரான கே.ஆர். இந்திரா அவர்களின் மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பாக நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால், துணை தலைவர் பொன்வண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எல்.உதயா, ஹேமச்சந்திரன் ஆகியோர் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top