ஆசிய க்ராண்ட்பிரிக்ஸ் மெய்வல்லுனர் போட்டிகளுக்காக இலங்கை மெய்வல்லுனர்கள் 12 பேர்

(UDHAYAM, COLOMBO) – சீனாவில் அடுத்த மாதம் ஆசிய க்ராண்ட்பிரிக்ஸ் மெய்வல்லுனர் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதில் இலங்கையில் இருந்து 12 மெய்வல்லுனர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதில் ஐந்து பெண் வீராங்கனைகளும், 7 வீரர்களும் உள்ளடங்குகின்றனர்.

சீனாவின் ஜியாக்சிங்கில் 24ம் திகதியும், ஜின்ஹுவாவில் 27ம் திகதியும், தாய்பேயில் 30ம் திகதியும் இந்த போட்டிகள் இடம்பெறுகின்றன.

ஜுன் மாதம் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஸிப் போட்டிகளிலும் இலங்கை பங்குகொள்வதால், இந்த போட்டித்தொடர் இலங்கைக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *