கொலைக் குற்றத்திற்காக 29 புலனாய்வு அதிகாரிகளுக்கு மரண தண்டனை

(UTV|SUDAN) – சூகாவலில் இருந்த ஆசிரியர் ஒருவரை துன்புறுத்தி கொலை செய்த குற்றத்திற்காக 29 புலனாய்வு அதிகாரிகளுக்கு சூடான் நீதிமன்றம் மரண தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

அந்நாட்டின் ஜனாதிபதி ஒமர் அல்-பஷீர் அரசாங்கத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக 36 வயதான அஹமத் அல்-கைர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்த நிலையில், அவர் கடந்த பெப்ரவரி மாதம் உயிரிழந்தார்.

சூடானின் கிழக்கு பகுதியில் உள்ள கஸாலா என்ற மாநிலத்தில் உள்ள தடுப்பு காவல் மையத்தில் அஹமத் அல்-கைர் அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டு, அடித்து கொல்லப்பட்டது நீதிமன்ற விசாரணையில் தெரிய வந்தது.

29 புலனாய்வு அதிகாரிகளுக்கும் தண்டனை அறிவித்த நீதிபதி, உயிரிழந்த அல்-கைரின் சகோதரரிடம், அவர்களை மன்னிக்க விரும்புகிறீர்களா அல்லது அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என நினைக்கிறீர்களா என வினவ அதற்கு அந்த சகோதரர், 29 பேரையும் தண்டிக்க வேண்டும் என தெரிவித்திருந்த நிலையில் குறித்த தீர்ப்பு வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *