நுவரெலியாவில் அரச பல்கலைக்கழகம்

(UTV|NUWARA ELIYA)- நுவரெலியா சததென்ன பூங்கா பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்படவுள்ளது.

தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன, நேற்று(04) நுவரெலியா சததென்ன வனவியல் பூங்காவிற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.

இதன் போது இந்த பூங்காவை பல்கலைக்கழகத்தை மாற்றியமைக்கவிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பிள்ளைகளில் கல்வித் தரத்தை உயர்த்துவதாகவும், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பினை பெற்றுத் தருவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *