சங்காவின் மனைவியை தவறாக பேசிய இந்திய வீரர்

சங்காவின் மனைவியை தவறாக பேசிய இந்திய வீரர்

(UTVNEWS| INDIA) – இந்திய அணியின் ஆல் சகலதுறை வீரர் இர்பான் பதான், சங்கக்காரவுடன் ஏற்பட்ட மோதலும், அதன் பின் எப்படி இருவரும் நண்பர்களாக மாறினோம் என்பது குறித்தும் தற்போது ஓய்வுக்கு பின் தெரிவித்துள்ளார்.

ஓய்வு தெரிவித்த பின்னர் தன் வாழ்வில் நடந்த மறக்க முடியாத அனுபவம் குறித்து கூறினார். அதில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்கக்காரவுடன் ஏற்பட்ட மோதல் பற்றி கூறும் போது, டெல்லியில் இலங்கை-இந்திய அணி மோதிய டெஸ்ட் போட்டியின் போது இரண்டாவது இன்னிங்ஸில் சேவாக்கால் ஆரம்ப வீரராக இறங்க முடியாத காரணத்தினால், நான் ஆரம்ப வீரராக இறங்கினேன்.

அந்த போட்டியில் 93 ஓட்டங்கள் பெற்றுக்டேன், அப்போது இலங்கை அணி தோல்வி அடையும் நிலையில் இருந்ததால், சங்ககாரா என்னை தனிப்பட்ட முறையில் தாக்கும் விதமாக எனது பெற்றோர் குறித்து மோசமாகப் பேசினார்.

உடனே நானும் பதிலுக்கு அவரது மனைவி பற்றி பேசினேன். இந்த சம்பவத்துக்கு பிறகு எங்கள் இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருந்தது.

அதன் பின் சில காலம் கழித்து இருவருமே ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு விளையாட வேண்டியிருந்தது. அப்போது சங்ககாரா அவரின் மனைவியிடம் இவர் தான் உன்னைப் பற்றி தவறாக பேசினார் என்று கூறினார். நான் அப்போது மன்னிப்பு கேட்டேன், உடனே சங்ககாரா நான் தான் முதலில் பெற்றோரை ஏசும் விதமாக பேசியதால் அவர் உன்னை பற்றி பேசியதாக கூறினார்.அதன் பின் இருவரும் நண்பர்கள் ஆகிவிட்டோம் என தெரிவித்தார்.

இந்திய அணி ஒரு சரியான சகலதுறை வீரர் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த போது, கடந்த 2003 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடர் மூலம் அறிமுகமாகி தன்னுடைய திறமையை நிரூபித்து,சிறந்த சகலதுறை வீரர் என காட்டியவர் தான் இர்பான் பாதன்.

அதன் பின் இந்திய அணியின் வெற்றிகள் பலவற்றிற்கு முக்கிய காரணமாக இருந்த இர்பான் பாதன், இளம் வீரர்களின் வருகை மற்றும் மோசமான பார்ம் காரணமாக அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

COMMENTS

Wordpress (0)
Disqus ( )