ஈரானில் பிரிட்டன் தூதர் கைது

ஈரானில் பிரிட்டன் தூதர் கைது

(UTV| ஈரான் )- பயணிகள் விமானத்தை சுட்டுக் கொன்றதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டதை அடுத்து, இரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்ற அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின்போது பிரிட்டன் தூதர் கைதுசெய்யப்பட்டார்.

ஈரானுக்கான பிரிட்டனின் தூதரான ராப் மெக்காரே மூன்று மணிநேரம் பொலிசாரின் பிடியில் வைக்கப்பட்ட சம்பவத்தை பிரிட்டன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வை நோக்கி சென்ற விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் ஒன்றில் பிரிட்டனின் தூதர் பங்கேற்றதாகவும், பின்னர் அதே கூட்டம் போராட்டமாக மாறியதாகவும் தெரியவந்துள்ளது.

ஈரான் தலைநகர் டெஹ்ரானிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உக்ரைன் தலைநகர் நோக்கி புறப்பட்ட விமானம் அடுத்த சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 176 பேரும் உயிரிழந்து மூன்று நாட்களுக்கு பிறகு, நேற்று (சனிக்கிழமை) தாங்கள் “தவறுதலாக” அந்த விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டதாக ஈரான் இராணுவம் அறிவித்தது.

உக்ரேனிய பயணிகள் விமானத்தை தாங்கள் சுட்டு வீழ்த்தவில்லை என்று முதலில் கூறிய இரான் அரசு, பின்பு மற்ற நாடுகளின் குற்றஞ்சாட்டுகளை தொடர்ந்து குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதை கண்டித்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

COMMENTS

Wordpress (0)
Disqus ( )