கணவர் தற்கொலைக்கு பின் மனம் திறந்த நடிகை மைனா நந்தினி!!

(UDHAYAM, COLOMBO) – சின்னத்திரை நடிகை மைனா நந்தினியின் காதல் கணவர் கார்த்திக் சில வாரங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவர் தற்கொலை செய்துகொள்ளும் முன்னர் எழுதிய கடிதத்தில் தனது மரணத்திற்கு நந்தினியின் அப்பா தான் காரணம் என கூறியுள்ளார்.

இதனையடுத்து கார்த்திக்கின் வீட்டில் உள்ளவர்களும், அவரது நண்பர்களும் நடிகை நந்தினி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு நடிகை நந்தினி தன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்து பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.

அதில், என் பெற்றோர்கள், தம்பி ஆகியோர் இல்லை என்றால் என் கணவர் கார்த்திக் தற்கொலை செய்து கொண்ட உடனேயே நானும் தற்கொலை செய்திருப்பேன். ஆனால் நான் என் பெற்றோரையும், தம்பியை தவிக்க விட்டு செல்ல விரும்பவில்லை.

அவர்கள் மூவரும் என் பிள்ளைகள் போன்றவர்கள். அந்த பிள்ளைகளை கவனித்துக் கொள்ளும் கடமை எனக்கு உள்ளதால் நான் தற்கொலை செய்துகொள்ளவில்லை.

ஆனால் என் கணவரின் குடும்பத்தினர் என் மீது பல புகார்களை தெரிவிக்கிறார்கள்.

இது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. தயவு செய்து என்னை நிம்மதியாக வாழவிடுங்கள் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *