தமிழ் மொழியை அகற்றிய உங்களால் சீன மொழியை அகற்ற முடியுமா? [VIDEO]

(UTV|மன்னார்) – பனந்தும்பு உற்பத்தின் பெயர் பலகையின் பெயர் மற்றம் தொடர்பில்  சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மன்னாரிற்கு கடந்த சனிக்கிழமை விஜயம் மேற்கொணட அமைச்சர் விமல் வீரவன்ச பனை அபிவிருத்திச் சபையின் பனந்தும்பு உற்பத்தி நிலையத்தினை திறந்து வைத்தார்.

வைபவ ரீதியாக திறக்கப்பட்ட பெயர்ப் பலகையில் தமிழில் முதலிலும் இரண்டாவது சிங்களத்திலும் மூன்றாவது ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது.

அந்தப் பெயர்ப்பலகையில் தமிழுக்கு கொடுக்கப்பட்டிருந்த முன்னுரிமையை அவதானித்த அமைச்சர் விமல் வீரவன்ச திறக்கப்பட்ட அந்த பெயர் பலகையை கழற்றி விட்டு உடனடியாக சிங்களத்தை முதலாவதாகவும் தமிழை அடுத்ததாகவும் வரும் வகையில் மாற்றும் படி உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதற்கமைவாக உரிய அதிகாரிகள் அமைதியான முறையில் மாற்றத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை குறித்த பெயர்ப்பலகை மாற்றப்பட்டு உரிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு மாற்றப்பட்டதை மகிழ்ச்சியூடன் அமைச்சர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு மாற்றப்பட்ட புகைப்படத்தையும் ஆதாரத்துக்கு வெளியிட்டிருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மன்னாரில் திறந்து வைத்த குறித்த பெயர்ப் பலகையில் இருந்த குறையை அந்த நேரத்திலேயே அதன் தலைவருக்கு நான் ஆனையீட்டதைத் தொடர்ந்து அது சரி செய்யப்பட்டிருக்கிறது. என்று முக நூலில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நேற்று நாடாளுமனறத்தில் உரையாற்றினார். மேலும் அமைச்சர் விமல் வீரவன்சவின் செயற்பாடு தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் கேள்வியெழுப்பியுள்ளார்.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )