மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் திறப்பு

மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் திறப்பு

(UTV|கிளிநொச்சி) – முதல் முறையாக இலங்கையில் மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் இன்று திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந் நிகழ்வில் இலங்கைக்கான நோர்வே தூதுவர் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் பொறியியல் பீடத்தின் அனுசரணையில் இந்த மின் நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த மின் உற்பத்தி நிலையத்திலிருந்து 42 கிலோ வோட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளமையுடன், ஆராய்ச்சி மற்றும் தகவல் பகிர்வு திட்டமாக பயன்படுத்தப் படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )