எமி ஜாக்சனின் திடீர் முடிவு

எமி ஜாக்சனின் திடீர் முடிவு

(UTV|இந்தியா ) -தமிழில் ரஜினி, விஜய், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை எமி ஜாக்சன், நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதராசபட்டணம், தாண்டவம், ஐ, தங்கமகன், கெத்து, தெறி போன்ற பல படங்களில் நடித்த எமி ஜாக்சன் கடைசியாக ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்தார். அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் வராததால் லண்டனில் குடிபெயர்ந்தார்.

பாய்பிரண்ட் ஜார்ஜ் பனயியோடோவுடன் காதலில் இருந்தார். இதில் எமி கர்ப்பமானார். இதையடுத்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். நிச்சயதார்த்தம் நடந்தது.

இதனையடுத்து திருமணம் ஆகாமலேயே கடந்த ஆண்டு எமி ஜாக்ஸன் ஆண் குழந்தை பெற்றெடுத்து ஆண்ட்ரியாஸ் என பெயரிட்டார். குழந்தை வளர்ப்பில் கவனமாக இருக்கும் எமி ஜாக்ஸன் தனது இன்ஸ்டாகிராமில் தனது 4 மாத குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார். ‘

எமி ஜாக்ஸன். குழந்தை பெற்ற பிறகே திருமணம் செய்துகொள்வது என்ற முடிவில் இருந்த எமி தனது பாய் பிரண்டை எப்போது மணக்கப்போகிறார் என்பதுபற்றி இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை.

புதிய பட வாய்ப்புகளும் எதுவும் தேடி வராத நிலையில் ஒரு குழந்தைக்கு தாயாகவும் ஆகிவிட்ட எமி ஜாக்சன் நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )