டீசல், பெட்ரோல் விலைகள் அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும்

டீசல், பெட்ரோல் விலைகள் அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும்

(UTV|கொழும்பு) – உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்தாலும் இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது எரிசக்தித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கத்தின் விலை மீளாய்வு திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த திட்டத்தின்படி தற்போது டீசலின் விலை 12 ரூபாவாலும் பெட்ரோல் 8 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டிக்க வேண்டும்.

எனினும் மக்கள் மீது பாரத்தை சுமத்தாது அரசாங்கம் நிதானப்போக்கில் செயற்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்தால் சில நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )