S1 Pro ஸ்மார்ட்போனை இலங்கையில் அறிமுகம் செய்த vivo

S1 Pro ஸ்மார்ட்போனை இலங்கையில் அறிமுகம் செய்த vivo

(UTV|கொழும்பு) –புதிய, மேம்படுத்தப்பட்ட S1 Pro அறிமுகத்துடன் இலங்கையில் புத்தாண்டை vivo Mobile, வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது. இதன் அறிமுகமானது, மிகத் தெளிவாக படமெடுக்க உதவும் உறுதியான 48MP பின்பக்க கெமரா மற்றும் wide-angle, macro மற்றும் bokeh என எந்தவொரு காட்சிக்கும் ஏதுவானதாக அமைந்த 3 மேலதிக கெமராக்கள் உள்ளடங்களான சக்திவாய்ந்த மென்பொருள் மற்றும் நேர்த்தியான புகைப்படத் தொழில்நுட்பம் ஆகியவற்றை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

S1 Proவின் 32MP முன்பக்க கமெரா சிக்கலின்றி படமெடுப்பதை உறுதி செய்வதுடன், இது இந்தத் துறையில் முன்னணியானதாகும். S1 Pro முதற்தர தொழில்நுட்ப அம்சங்களுடன், முற்றிலும் புதுமையான, இந்தத்துறையில் தனித்துவமான வைரம் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள quad-camera அமைப்பையும் கொண்டது.

S1 Proவின் விலை ரூ .54, 990 என்பதுடன், இது தற்போது சந்தையில் கட்டுப்படியாகும் விலையில் கிடைக்கும் அதி நவீன ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இந்த சாதனமானது தொழில்துறையினருக்கு ஏற்றதுடன், கல்லூரி மாணவர்கள், புகைப்படக்கலைஞர்கள் மற்றும் தீவிர சமூக ஊடகப் பாவனையாளர்களுக்கும் உகந்தது.

S1 Pro பயனாளிகளுக்கு 90% screen-to-body ratio உடன் கூடிய 6.38 அங்குல Super AMOLED திரை, 1080P resolution மற்றும் அற்புதமான வண்ண ஒத்திசைவு ஆகியனவற்றை கொண்டு வருகின்றது. சினிமா காட்சி அனுபவத்தை பயனாளிகள் பெற இது உதவுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது Full-View திரை மற்றும் உறுதியான வன்பொருள் ஆகியனவற்றைக் கொண்டுள்ளமையானது கேமிங் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த தனிநபர்களுக்கும் ஏற்றதாகவுள்ளது.

“S1 Pro கவர்ச்சிகரமான தோற்றத்தைக் கொண்ட உயர் தரமான ஸ்மார்ட்போன்களை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பின் எடுத்துக்காட்டாக அமையும்" என vivo Mobile Lanka வின் பிரதான நிறைவேற்று அதிகாரி Kevin Jiang தெரிவித்தார். “S1 Pro வின் மேம்படுத்த அம்சங்கள் vivo தனது இளம் பாவனையாளர்களுக்கு சிறப்பான பாவனை அனுபவத்தை வழங்கும் ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதற்கான கடமையை வலியுறுத்துகின்றது’ என அவர் மேலும் தெரிவித்தார்.

S1 Pro வினை Snapdragon 665 chipset மற்றும் 8GB RAM இனால் வலுவூட்டப்படுகின்றது. இதன் உள்ளக நினைவகம் 128 GB என்பதுடன் இதனை microSD மூலம் 256 GB வரை நினைவகத்தை அதிகரிக்க முடியும். இந்த ஸ்மார்ட்போனானது பாரிய 4,500mAh பட்டரியைக் கொண்டுள்ளதுடன் இது USB-C ஊடான 18W dual-engine fast charging வசதியையும் கொண்டுள்ளது. இந்த போனின் அளவு 159.25 x 75.19 x 8.68mm என்பதுடன் நிறை 186.7 கிராம்களாகும்.

இந்த சாதனம் அபான்ஸ் மற்றும் நாடுபூராகவும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களிடமும் கிடைக்கிறது.

vivo பற்றி

vivo உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் என்பதுடன் புதுமையான ஸ்மார்ட் மொபைல்கள் மற்றும் சேவைகளை உருவாக்குவதில் திடமாகவுள்ளது. vivo உலகளவில் 100 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் சான்றளிக்கப்பட்டுள்ளது. vivo உலகளாவிய ரீதியில் 30 இற்கும் மேற்பட்ட சந்தைகளில் தனது பிரசன்னத்தைக் கொண்டுள்ளதுடன், உலகளவில் 1,000 க்கும் மேற்பட்ட நகரங்களில் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் கிடைக்கப் பெறுகின்றது. வன்பொருள் வடிவம் மற்றும் உற்பத்தி முதல், மென்பொருள் உருவாக்கம் (Android based Funtouch OS) வரை, vivo பூரண மற்றும் நிலைபேறான தொழில்நுட்ப சூழலை கட்டமைத்துள்ளது. தற்போது 20,000 இயக்குனர்கள் Dongguan, Shenzhen, Nanjing, Chongqing ஆகிய நான்கு தலமையகங்களின் கீழ் பணியாற்றுகின்றனர். 3,000 பொறியியலாளர்கள் in Beijing, Hangzhou, Shanghai, Nanjing, Shenzhen, Dongguan, Taipei, Tokyo மற்றும் San Diego (USA) ஆகிய 9 ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையங்களில் பணியாற்றுகின்றனர்.

இந்நிறுவனம் Dongguan, Chongqing, India, Bangladesh மற்றும் Indonesia ஆகிய ஐந்து உற்பத்தி மையங்களைக் கொண்டுள்ளது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )