மெனிங் சந்தையில் நுகர்வோரின் எண்ணிக்கை குறைவு

மெனிங் சந்தையில் நுகர்வோரின் எண்ணிக்கை குறைவு

(UTV|கொழும்பு) – புறக்கோட்டை மெனிங் வர்த்தக சந்தையில் காய்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

போஞ்சி மற்றும் லீக்ஸ் ஒருகிலோவின் மொத்த விலை 200 ரூபாவாகவும், கோவா ஒரு கிலோ 80 ரூபாவிற்கும் 100 ரூபாவிற்கும் இடையிலும் கறிமிளகாய் ஒரு கிலோவின் மொத்த விலை 150 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டதாக புறக்கோட்டை மெனிங் வர்த்தக சந்தை வர்த்தக சங்கத்தின் பிரதான அமைப்பாளர் அணில் இந்திரஜித் தெரிவித்துள்ளார்.

புறக்கோட்டை மெனிங் வர்த்தக சந்தைக்கு சுமார் 40 லொறிகளில் மரக்கறி கொண்டு வரப்பட்டதாகவும் மரக்கறிகள் போதுமான அளவு இருந்த போதும் நுகர்வோர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

COMMENTS

Wordpress (0)
Disqus ( )