கொரோனா வைரஸ்- உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

கொரோனா வைரஸ்- உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTV| சீனா) – சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 பேராக உயிரிழந்துள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நோய் பரவாமல் தடுக்கும் வகையில் நீண்ட தூர பயணங்களை தவிர்க்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், முதியவர்கள் உள்ளிட்டவர்கள் அதிக அளவில் இந்த வைரசுக்கு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலும், 450க்கும் மேற்பட்ட நோயாளிகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )