லிந்துலையில் திடீர் தீ விபத்து

லிந்துலையில் திடீர் தீ விபத்து

(UTVNEWS |LINDULA) –லிந்துலை பாமஸ்டன் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இத்தீவிபத்தில் ஹாட்வெயார்(Hardware Store), மரத் தளபாட கடை, கடைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மற்றும் வீடு ஆகியன முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தீவிபத்து நேற்று இரவு 10 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பாமஸ்டன் பகுதியில் வீதிக்கு அருகாமையில் உள்ள ஒரே கட்டிடத்தில் அமையப்பெற்றுள்ள ஹாட்வெயார்(Hardware Store), மரத் தளபாட கடை, வீடு ஆகியன முற்றாக எரிந்து சாம்பலாகியதுடன், கடைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியும் தீக்கிரையாகியுள்ளது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )