அரசாங்க அதிபர்கள் கடமையேற்பு

அரசாங்க அதிபர்கள் கடமையேற்பு

(UTVNEWS | KELINOCHI) –கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் புதிய அரசாங்க அதிபராக ரூபவதி கேதீஸ்வரன் இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

இந்த சந்தர்ப்பத்தில், கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி பணிகள் மற்றும் அத்தியாவசிய விடயங்கள் தொடர்பாக தான் நீண்ட கவனம் செலுத்தி, மக்களிற்கு வேண்டிய சகல விடயங்களையும் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும், அத்தோடு விடுபட்டுள்ள அபிவிருத்தி பணிகளையும், குறைநிலையில் காணப்படும் விடயங்களையும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக திருமதி கலாமதி பத்மராஜா, உத்தியோகபூர்வமாக இன்று தனது கடமையைப் பொறுப்பேற்றார்.

அவர் கடமையேற்கும் சந்தர்ப்பத்தில் , பொதுமக்களின் தேவையை உரிய நேரத்துக்குள் நிறைவேற்றிக்கொடுக்கவேண்டும் என்றும் , அதற்குத் தேவையான அர்ப்பணிப்பை உத்தியோகத்தர்கள் வழங்கவேண்டுமென்றும், தெரிவித்துள்ளார்.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )