இலங்கையின் பொருளாதாரம் வழமைக்கு – IMF

இலங்கையின் பொருளாதாரம் வழமைக்கு – IMF

(UTV|கொழும்பு) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னர் இலங்கையின் பொருளாதாரம் வழமைக்குத் திரும்புவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பின் பிரகாரம், 2020 ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதார விருத்தி 3.7 வீதமாக அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும், புதிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வரிச்சலுகைகள் மற்றும் வரி நீக்கம் காரணமாக வரவு செலவிற்கான குறைநிரப்பு மேலும் தளர்வாகும் என சர்வதேச நாணய நிதியம் மேலும் அறிவித்துள்ளது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )