அவுஸ்திரேலியா அணியில் இருந்து மெக்ஸ்வெல் விலகல்

அவுஸ்திரேலியா அணியில் இருந்து மெக்ஸ்வெல் விலகல்

(UTV|அவுஸ்திரேலியா ) – முழங்கை காயத்திற்கு சத்திரசிகிச்சை காரணமாக தென்ஆப்பிரிக்கா தொடருக்கான அவுஸ்திரேலியா அணியில் இருந்து மேக்ஸ்வெல் விலகியுள்ளார்.

ஆஸ்திரேலியா அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளது.

இதற்கான ஆஸ்திரேலியா அணியில் அதிரடி துடுப்பாட்ட வீரர் மேக்ஸ்வெல் இடம் பிடித்திருந்தார். அவர் முழங்கை காயத்திற்கு சத்திரசிகிச்சை செய்து கொள்ள இருக்கிறார். இதனால் தென்ஆப்பிரிக்கா தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில், அவருக்குப் பதிலாக டி’ஆர்கி ஷார்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )