நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இறந்த தன் மகளை மீண்டும் கண்டு உருகிய தாய் [VIDEO]

(UTV|தென்கொரியா) – வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் நினைத்து கூட பார்க்க முடியாத அளவில் பல கண்டுபிடிப்புகளின் மூலம் நம்மை வியக்க வைத்து விடுகிறது. அந்த வகையில், விர்சுவல் ரியாலிட்டி என்னும் தொழில்நுட்பத்தின் மூலம், இல்லாததை உருவாக்குவதும், அதற்கென ஒரு தனி உலகத்தை படைத்து, அதற்குள் நாம் பயணித்து அந்த மாய உலகத்தோடு உரையாடச் செய்வதும் தான், இந்த தொழில்நுட்பத்தின் மிக பெரிய சிறப்பு அம்சமாக உள்ளது. அந்த வகையில், கொரியவில் உள்ள ஊடகம் ஒன்றில் இந்த தொழில்நுட்பம் சோதனை செய்யப்பட்டுள்ளது.

அந்த நிகழ்ச்சிக்கு Meeting you (உன்னைச் சந்தித்தல்) என்று பெயரிடப்பட்டு நடத்தப்பட்டது, அந்த நிகழ்ச்சியில் பெண் ஒருவர் கலந்து கொண்டுள்ளார். அந்த பெண் கடந்த 2016ம் ஆண்டு, தனது மகளை, ஒரு மர்ம நோயிடம் பறிகொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து, இறந்து போன தனது குழந்தையிடம் விர்சுவல் ரியாலிட்டி மூலம் தாய் உரையாடும் வகையில், அது வடிவமைக்கப்பட்டது.

விர்சுவல் ரியாலிட்டி உலகத்திற்குள் அந்த பெண் சென்றதும், அந்த குழந்தையை பார்த்து கதறி அழுதார். இருவருக்கும் நடந்த உரையாடல் நீண்டு கொண்டே இருந்தது. குழந்தையை பறிகொடுத்து தவிக்கும் தாயின் பாசப் போராட்டம், அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *