நகர சபையாக மாறியது சாய்ந்தமருது – வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

நகர சபையாக மாறியது சாய்ந்தமருது – வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

(UTV|அம்பாறை) – அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகரசபையிலிருந்து பிரிந்து சாய்ந்தமருதிற்கு தனியான நகரசபை வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனினால் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி 2022 ஆம் ஆண்டு மார்ச மாதம் 20 ஆம் திகதி முதல் அதிகாரத்திற்கு வரும் வகையில் சாய்ந்தமருது நகர சபை உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது ஒன்று முதல் 17 வரை கிராம அலுவலகர் பிரிவுகளை உள்ளடக்கியவாறு இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )