இந்திய மகளிர் அணி வெற்றி

இந்திய மகளிர் அணி வெற்றி

(UTV|இந்தியா) – மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ணத்தில் பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 18 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 142 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணி சார்பில் பாலி வர்மா 17 பந்துகளில் 39 ஓட்டங்களையும் ஜெமிமா ரெட்ரிகர்ஸ் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய பங்களாதேஷ் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ஓட்டங்களை​பெற்று தோல்வியடைந்தது

லீக் சுற்றில் இந்தியா தொடர்ச்சியாக 2 போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )