உலகிலேயே மிக வயதான மனிதர் மண்ணுக்குள்

உலகிலேயே மிக வயதான மனிதர் மண்ணுக்குள்

(UTV|கொழும்பு) – உலகிலேயே மிக வயதான மனிதராக அறியப்பட்ட ஜப்பானை சேர்ந்த சிடேட்சு வடானபி (Chitetsu Watanabe) உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.

அவருக்கு வயது 112. ஜப்பானின் நீகாடா நகரில் 1907-ம் ஆண்டு மார்ச் மாதம் பிறந்த சிடேட்சு வடானபி தனது இளமை காலத்தை தாய்வானில் கழித்தார்.

அங்கு 18 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அவர், திருமணத்துக்கு பின் ஜப்பான் திரும்பினார். ஜப்பானில் அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்ற அவருக்கு 5 பிள்ளைகள், 12 பேரன்கள், 16 கொள்ளு பேரன்கள் உள்ளனர்.

இவரை உலகில் வாழும் மிக அதிக வயதுடைய ஆணாக கடந்த 12ம் திகதி கின்னஸ் புத்தகம் தேர்வு செய்து, சான்றிதழ் வழங்கியது. இதற்கு முன்னா் உலகின் மிக அதிக வயதுடைய ஆண் என்ற சாதனையை படைத்திருந்த மற்றொரு ஜப்பானியரான மசாசோ நோனாகா, கடந்த மாதம் இறந்ததை தொடா்ந்து, சிடேட்சு வடானபிக்கு இந்த பெருமை கிடைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )