ஐ.தே.கட்சியுடனான விசேட கலந்துரையாடல்

ஐ.தே.கட்சியுடனான விசேட கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் தொடர்பில் அரசாங்கம் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் கலந்துரையாடல் இன்று (01) இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் மேலும் சிலர் இந்த கலந்துரையாடலில் அரசாங்க தரப்பில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர்கள் தினேஷ் குணவர்தன, நிமல் சிறிபாலா டி சில்வா, விமல் வீரவன்ச, பந்துல குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் டலஸ் அழகபெரும ஆகியோரும் அரசாங்க தரப்பில் பங்கேற்றுள்ளனர்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்னாள் பாரா ளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணநாயக்க, அர்ஜுனா ரணதுங்க, ருவன் விஜேவர்தன, தயா கமகே, பாலித ரங்கே பண்டார, நவீன் திசாநாயக்க உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )