தகவல் அறியும் சட்டம் தொடர்பாக முப்படை வீரர்களுக்கு விளக்கம்

(UDHAYAM, COLOMBO) – தகவல் அறியும் சட்டம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் முக்கியஸ்தர்கள் மற்றும் சிரேஸ்ட அதிகாரிகளை தெளிவுபடுத்தும் விசேட செயலமர்வு பாதுகாப்பு அமைச்சில் இன்று காலை இடம்பெற்றது.

2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி நிறைவேற்றப்பட்ட 2016ம் ஆண்டு இலக்கம் 12 தகவல்களை அறியும் சட்டம் (RTI No 12 of 2016) தொடர்பாக அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன்சூரிய , தேசிய ஊடக கேந்திர நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் சட்டத்தரணி ஜெயகத் லியன ஆராய்ச்சி ஆகியோர் விசேட உரை நிகழ்த்தினர்.

இந்த நிகழ்வில் அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் முப்படையைச் சேர்ந்த சிரேஸ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *