உலகம்

கொரோனாவைத் தொடர்ந்து கொங்கோவில் எபோலா ஆதிக்கம்

(UTV | கொங்கோ) – கொங்கோ நாட்டின் மேற்கு மாகாணமான ஈக்வேட்டோரில் எபோலா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொங்கோ ஜனநாயக குடியரசு உத்தியோகபூர்வமாக இன்று(01) தெரிவித்துள்ளது.

கொங்கோ ஜனநாயக குடியரசின் சுகாதார அமைச்சர் எட்டெனி லாங்கோண்டோ (Eteni Longondo) தெரிவிக்கையில், கடந்த ஏப்ரல் மாதம் கொங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் எபோலா நோய்த்தொற்று முற்றிலுமாக அகற்றப்பட்டதாகவும், எனினும் தற்பொழுது எபோலா நோய்த்தொற்று கொங்கோ நாட்டின் மேற்கு பகுதியில் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அதனை கண்டறியும் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

இதேவேளை கொரோனா தொற்று காரணமாக கொங்கோவில் இதுவரை 611 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 20 உயிரிழப்புகள் மாத்திரமே பதிவாகியுள்ளன. மேலும் 179 பேர் பூரணமாக சுகமடைந்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top