விளையாட்டு

18வது ஆசிய பௌதீக விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டி குழுவினர் – ஜனாதிபதி சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – 18வது ஆசிய பௌதீக விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றுவதற்காக ரஷ்யா செல்லவுள்ள இலங்கை மாணவ குழுவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றுவதற்காக ரஷ்யா செல்லவுள்ள மாணவக் குழுவினருக்கு ஜனாதிபதி பயணச்செலவாக ஒரு லட்சம் ரூபாவை வழங்கினார்.

இந்த குழுவில் குருணாகல் மலியதேவ மகளிர் கல்லூரியின் மே.டீ.எம்.அமாயா தர்மசிறி, மாத்தறை ராஹூல கல்லூரியின் ஆர்.பீ.நிசல் புன்சர, காலி ரிச்மன்ட் கல்லூரியின் யூ.பி.சதுர ஜயசங்க, கொழும்பு றோயல் கல்லூரியின் எம்.பீ.எஸ்.டிமல் தனுக்க, ஏ.கே.ஏ.ரன்துல, திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியின் மொஹமட் அப்லால் மொஹமட் அபாம், கொழும்பு ஆனந்தா கல்லூரியின் டி.எம்.எஸ்.சமரகோன், குருணாகல் மலியதேவ கல்லூரியின் பீ.ஜீ.எஸ்.சத்துரங்க பண்டார ஆகிய மாணவர்கள் உள்ளடங்குகின்றனர்.

மே மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒன்பதாம் திகதி வரை ரஷ்யாவின் சைபீரியா மாநிலத்தில் லுயமரவளம பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள போட்டியில் 22 ஆசிய நாடுகள் பங்கேற்கவுள்ளன.

இந்த மாணவ குழுவினர் ரஷ்யாவிலிருந்து லுயமரவளம பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கான விமான பயண வசதிகளை வழங்குமாறு ரஷ்ய தூதரகத்துக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன், இலங்கை சர்வதேச பௌதீக விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எஸ்.ஆர்.டீ.ரோசா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top